என். செளந்தர பாண்டியன் (சமயநல்லூர்)
தோற்றம்
என். செளந்தர பாண்டியன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | எம். காளிராஜன் |
| பின்னவர் | ஆ. சிவகுமார் |
| தொகுதி | சமயநல்லூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 அக்டோபர் 1950 சமயநல்லூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
என். செளந்தர பாண்டியன் (N. Soundarapandian) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியினைச் சேர்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளியில் பள்ளிக் கல்வியினையும், மதுரை கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரியிலும் முறையே இளங்கலை, இளங்கலைச் சட்டக் கல்வியினைப் பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]