என். கோடிஸ்வர் சிங்
மாண்புமிகு நீதிபதி நோங்மேகாபம் கோடிஸ்வர் சிங் | |
|---|---|
| இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 18 சூலை 2024 | |
| பரிந்துரைப்பு | தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் |
| நியமிப்பு | திரௌபதி முர்மு |
| 36ஆவது தலைமை நீதிபதி சம்மு மற்றும் காசுமீர் மற்றும் இலடாக்கு உயர் நீதிமன்றம் | |
| பதவியில் 15 பெப்ரவரி 2023 – 17 சூலை 2024 | |
| பரிந்துரைப்பு | தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் |
| நியமிப்பு | திரௌபதி முர்மு |
| முன்னையவர் | அலி முகமது மாக்ரே |
| பின்னவர் | டாசி ராப்ஸ்தன் |
| குவகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி | |
| பதவியில் 11 அக்டோபர் 2018 – 14 பெப்ரவரி 2023 Acting CJ : 12 சனவரி 2023 - 14 பெப்ரவரி 2023 9 மே 2022 - 22 சூன் 2022 21 செப்டம்பர் 2020 - 9 சனவரி 2021 | |
| பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
| நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 மார்ச்சு 1963 இம்பால், மணிப்பூர் |
| முன்னாள் மாணவர் | தில்லி பல்கலைக்கழகம் |
நோங்மேகாபம் கோடிஸ்வர் சிங் (Nongmeikapam Kotiswar Singh) (பிறப்பு: 1 மார்ச் 1963) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இதற்கு முன்பு, இவர் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். இவர் குவகாத்தி உயர் நீதிமன்றம் மற்றும் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவர் மூன்று முறை குவகாத்தி உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். மேலும், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு பிரதான நீதிபதியாகவும் இரண்டு முறை பணியாற்றியுள்ளார்.[1][2][3]
தொழில் வாழ்க்கை
[தொகு]சிங் 1963-ஆம் ஆண்டில் மணிப்பூரின் இம்பாலில் பிறந்தார். இவரின் தந்தை என். இபோடோம்பி சிங் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும், மணிப்பூர் மாநிலத்தின் முதல் அரசுத் தலைமை வழக்கறிஞராகவும் இருந்தார்.[4] சிங் புருலியாவில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் வித்யாபீடத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்து 1983-இல் கிரோரி மால் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1986 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார். இவர் உச்ச நீதிமன்றம், குவஹாத்தி உயர் நீதிமன்றம், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் பணியாற்றினார். 2007 நவம்பர் 3 அன்று மணிப்பூரின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் அக்டோபர் 17,2011 அன்று குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்டு நவம்பர் 7,2012 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மணிப்பூர் உயர்நீதிமன்றம் 23 மார்ச் 2013 அன்று உருவாக்கப்பட்ட பின்னர் இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[5][6] மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 1 சூலை 2017 முதல் 8 பிப்ரவரி 2018 வரையிலும், மீண்டும் 23 பிப்ரவரி 2018 முதல் 17 மே 2018 வரையிலும் நியமிக்கப்பட்டார். இவர் 2018 அக்டோபர் 11 அன்று குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் நீதியபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் 21 செப்டம்பர் 2020 முதல் 9 சனவரி 2021 வரையிலும், 9 மே 2022 முதல் 22 சூன் 2022 வரையிலும், மீண்டும் 12 சனவரி 2022 முதல் 14 பிப்ரவரி 2022 வரையிலும் குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 15 பிப்ரவரி 2023 அன்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Justice Nongmeikapam Kotiswar Singh appointed Acting Chief Justice of Gauhati High Court". barandbench.com. 22 September 2020. Retrieved 29 August 2021 – via Bar & Bench News.
- ↑ "Hon'ble The Chief Justice & Sitting Judges – The Gauhati High Court" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 3 April 2022.
- ↑ Sharma, Devika (23 September 2020). "Gauhati HC | Justice Nongmeikapam Kotiswar Singh, Senior-most Judge appointed as the Acting Chief Justice". SCC Blog (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 3 April 2022.
- ↑ "Welcome to High Court of Manipur Imphal - Justice N.Ibotombi Singh". hcmimphal.nic.in. Retrieved 3 April 2022.
- ↑ "High Court of manipur at Imphal". hcmimphal.nic.in. Retrieved 3 April 2022.
- ↑ "Sudhanshu Dhulia takes oath as Chief Justice of Gauhati High Court". NORTHEAST NOW (in அமெரிக்க ஆங்கிலம்). 11 January 2021. Retrieved 3 April 2022.
- ↑ "New Chief Justices appointed to 4 HCs". https://indianexpress.com/article/india/new-chief-justices-appointed-to-4-hcs-8441049/.