என். கே. தாமோதரன்
என். கே. தாமோதரன் (N. K. Damodaran)(1909–1996) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]தாமோதரன் 1909ஆம் ஆண்டு ஆகத்து 3ஆம் தேதி கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆறன்முளாவில் பிறந்தார். இளங்கலை, இளநிலைச் சட்டப் படிப்பினை முடித்த பிறகு அரசுப் பணியில் கணக்கு அதிகாரியாகச் சேர்ந்தார். பின்னர் சாகித்யா பிரவார்த்தக கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றினார். சர்வவிஞ்ஞான கோசத்தில் துணை ஆசிரியராகவும், கலகௌமுதி வார இதழில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு கல்யாணி கிருஷ்ண மேனன் பரிசையும் 1974ஆம் ஆண்டு சோவியத்லேண்ட் நேரு விருதையும் பெற்றார். இவரது முதன்மையான பங்களிப்பு மொழிபெயர்ப்புத் துறையில் இருந்தது. மேலும் பியோடர் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்த முதல் நபரும் இவரே.
குடும்பம்
[தொகு]தாமோதரனுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவர்கள்: பிரசன்னகுமாரி, மருத்துவர் சாந்தாதேவி, கிருஷ்ணகுமாரி, மருத்துவர் சியாமளாதேவி, மருத்துவர் எஸ். சி. போஸ், வழக்கறிஞர் பி. எசு. லைலா.
முக்கிய படைப்புகள்
[தொகு]- கேரள சாகித்யம்
- குசுமார்ச்சனா
- கரமசோவ் சஹோதரன்மர்
- நிந்திதரும் பீடிதரும்
- அடிதட்டுக்கல்
- தாமசுசக்தி
- மரிச்சா வீடு
- பூதவிசுடர்