உள்ளடக்கத்துக்குச் செல்

என். கிருஷ்ணசாமி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். கிருஷ்ணசாமி ரெட்டி
சென்னை மாநிலத்தின் அரசு தலைமை வழக்கறிஞர்
பதவியில்
1964–1966
முன்னையவர்வி. கே. திருவேங்கடாச்சாரி
பின்னவர்மோகன் குமாரமங்கலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1913
இறப்பு7 திசம்பர் 2002 (age 89)

என். கிருஷ்ணசாமி ரெட்டி (N. Krishnaswami Reddy) (1913 -. 7 திசம்பர் 2002) என்பவர் இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் சென்னை மாநிலத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக 1964 - 1966 காலக்கட்டத்தில் பணியாற்றினார். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இவர் 1913 இல் ரெட்டிபாளையத்தில் பிறந்த்தார். தன் படிப்பை செங்கல்பட்டில் உள்ள, செயின்ட் கொலம்பஸ் உயர்நிலைப்பள்ளியிலும், உயர் கல்வியை சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார் பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்ததும், 1939 திசம்பர் 11 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேர்ந்தார்.

தொழில்

[தொகு]

கிருஷ்ணசாமி ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட 1960 திசம்பர் வரை சென்னை உயர் நீதிமன்றத்திலும், செங்கல்பட்டில் உள்ள துணை நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டர். 1964 ஆம் ஆண்டில், இவர் சென்னை மாநிலத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, 1966 சூலை 8, வரை பணியாற்றினார். அப்போது இவர் சர்ச்சைக்குரிய வகையில் உயர் நீதிமன்ற ஆயத்திற்கு நியமிக்கப்பட்டார்.

இறப்பு

[தொகு]

கிருஷ்ணசாமி ரெட்டி 2002 திசம்பர் 7 அன்று இறந்தார்.[1]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கிருஷ்ணசாமி_ரெட்டி&oldid=3765986" இலிருந்து மீள்விக்கப்பட்டது