என். கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். கணபதி (N. Ganapathy) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 1971 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் 1973 முதல் 1977 வரை தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகராகப் பணியாற்றினார்.

இவர் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் தொகுதியில் 1989 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.1988 முதல் 1991 வரையிலான காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் சிறந்த சட்ட வல்லுனர். பதி மற்றும் சுந்தரம் என்ற சட்ட நிறுவனத்தைத் தன் தலைமையின் கீழ் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளை நடத்தி வந்தார். இந்தியாவின் முன்னாள் சட்டத்துறை அதிபதி மற்றும் சட்டத்தலைமை அலுவலர் திரு. ஜி. ராமசாமியுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இணைந்து பணியாற்றியவர்.[1][2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கணபதி&oldid=2897631" இருந்து மீள்விக்கப்பட்டது