என். எஸ். நாணா
என்.எஸ். நாணா | |
---|---|
பிறப்பு | திசம்பர் 25, 1960 இராங்கியம், புதுக்கோட்டை |
என்.எஸ். நாணா என்கிற நாராயணன் என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தோவியர் மற்றும் வடிவமைப்பாளராவார். தமிழக அரசின் பாடநூல், அரசாணைகளில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்களை உருவாக்கியவர். 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாடு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்றவராவார்.
இளமைக் காலம்
[தொகு]இவர் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 25 இல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த இராங்கியம் கிராமத்தில் சண்முகம், பார்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இராங்கியம் சிவகாமி அம்பாள் உயர்நிலையில் பள்ளிக்கல்வியும் பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசுக் கலைக்கல்லூரியில் வணிகவியலில் இளஞ்கலைக் கல்லூரிப்படிப்பையும் முடித்தார்.
பணிக்காலம்
[தொகு]இந்தியா டுடே வார இதழாக வெளிவந்த தமிழ், தெலுங்கு, மலையாளம் பதிப்புகளின் தலைமை வடிவமைப்பாளராக 25 ஆண்டு காலம் பணியாற்றியவர்.[2] பாக்யா, வண்ணத்திரை, முத்தாரம், குங்குமம், மய்யம் உள்ளிட்ட இதழ்களில் பகுதிநேர வடிவமைப்பாளாராகப் பணிசெய்துள்ளார். கதை, கட்டுரைகளுக்காக விதவிதமான எழுத்துருக்களில் தலைப்புகளை வடிவமைத்து வந்துள்ளார்.
கணினித்தமிழ்
[தொகு]இவர் எழுத்தாளர் சுஜாதா, கவியரசர் கண்ணதாசன் முதலியோரின் கையெழுத்துகளை எழுத்துருவாக மாற்றியவர். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் மு. கருணாநிதி ஆகியோரின் கையெழுத்துகளை எழுத்துருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.[3] இவர் வடிவமைத்த 50 எழுத்துருக்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் பொதுப்பயன்பாட்டில் வெளியிடப்பட்டுள்ளன.[4] அதில் முல்லை, பாலை அரசு பாடநூல்களிலும், மருதம் எழுத்துரு அரசாணைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத் தமிழ் வட்டெழுத்தை ஒருங்குறி பயன்பாட்டுக்கு இணக்கமான எழுத்துருவாக வடிவமைத்துள்ளார். இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் தமிழ்க் கணினி விருதினைப் பெற்றார்.[5] தமிழ் வளர்ச்சித்துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசுப் பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கணினி மூலம் எளிய முறையில் பிழையின்றி தமிழ் உள்ளீடு செய்வதற்கான பயிற்சிப்பட்டறைகளை நடத்திவருகிறார். புகைப்படக்கலையிலும் பல விருதுகள் பெற்றவர், கிட்டார் இசைக்கலைஞர்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "எந்த வயதிலும் விருப்பமான தேடலை நோக்கி பயணிக்கலாம்!". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=3409768. பார்த்த நாள்: 3 September 2023.
- ↑ "சுஜாதா, கண்ணதாசனுக்கு அடுத்து எம்.ஜி.ஆர்! - பிரபலங்களின் கையெழுத்தை எழுத்துருவாக்கும் ஓவியர் நாணா பேட்டி". விகடன். https://www.vikatan.com/oddities/miscellaneous/94955-artist-naana-interview-who-is-changing-famous-peoples-hand-writings-into-computerised-fonts. பார்த்த நாள்: 3 September 2023.
- ↑ "தொடு கறி: அம்பேத்கரின் பாலி அகராதி இப்போது தமிழில்!". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/literature/136204--2.html. பார்த்த நாள்: 3 September 2023.
- ↑ "Tamil Fonts". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 3 September 2023.
- ↑ "தமிழ்நாடு நாள் செய்திக் குறிப்பு". செய்தி மக்கள் தொடர்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 23 July 2023.