என். எம். மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். எம். மோகன்
பிறப்பு31 அக்டோபர் 1949
இறப்பு12 திசம்பர் 2012(2012-12-12) (அகவை 63)
குடிமகன் இந்தியா
துறை (கள்)சித்திரக்கதை எழுத்தாளர்
சித்திரக்கதை இதழ் வடிவமைப்பாளர்
கவனிக்கத் தக்க வேலைகள்மாயாவி
லூத்தாப்பி
Notable collaborationsபிரதீப் சாத்தே
எம். மோகன்தாஸ்

என். எம். மோகன் (N. M. Mohan) (1949-2012) ஓர் இந்திய சித்திரக்கதை எழுத்தாளரும், பத்திரிக்கையாசிரியரும், பத்திரிகை மற்றும் விளம்பர வடிவமைப்பாளரும், காட்சிப்படுத்தல் மற்றும் கட்டடக்கலை ஆலோசகரும் ஆவார்.[1] இவர் மலையாளத்தில் சித்திரக்கதை பத்திரிகை வெளியீட்டின் முன்னோடிகளில் ஒருவராகவும், கேரளாவில் பல பிரபலமான நகைச்சுவை கதாபாத்திரங்களை உருவாக்கியவராகவும் அறியப்படுகிறார்.[2] இவர் மலையாள சித்திரக்கதை இதழான பூம்பட்டா, பலராமன் ஆகியவற்றின் ஆசிரியராக பணியாற்றினார்.[3]

பல கலைஞர்களுடனும் சித்திரக்கதை படைப்பாளர்களுடன் குறிப்பாக மாயாவி, லுத்தாப்பி மற்றும் பல கற்பனை கதாபாத்திரங்களை தயார் செய்த பிரதீப் சாத்தே, எம். மோகன்தாஸ் போன்றவர்களுடன் இணைந்து, எளிய, இயற்கையான கருப்பொருள்களை அறிமுகப்படுத்தினார். மேலும், பூம்பட்டா, பலராமன் இதழ்களின் எழுச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.

சுயசரிதை[தொகு]

மோகன், 1949ஆம் ஆண்டு கேரளாவின் பாலை என்ற ஊரில் தொழிலதிபர் என். ஜி. பாஸ்கரன் நாயர் என்பவருக்கு மகனாக பிறந்தார். பளை, புனித தாமஸ் கல்லூரியிலும், சங்கனாச்சேரி, என்எஸ்எஸ் கல்லூரியிலும் படித்தார். இவர் வைக்கம் சந்திரசேகரன் நாயரின் மகள் லதா என்பவரை மணந்தார். இவர் கோட்டயத்திலுள்ள நட்டாச்சேரி, செருநாரகம் சாலை, பாலமுண்டக்கல் வீட்டில் வசித்து வந்தார்.[3]

பணிகள்[தொகு]

மோகன், சித்திரகார்த்திகா என்ற மலையாளப் பத்திரிக்கையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் (திருவனந்தபுரத்தில் இருந்து வைக்கம் சந்திரசேகரன் நாயரால் வெளியிடப்பட்டது). பின்னர் இவர் மலையாளத்தில் முன்னோடி சித்திரக்கதைப் பத்திரிகைகளில் ஒன்றான பூம்பட்டாவுக்கு மாறினார். மேலும், 1983 முதல் 2012 வரை "பலராமன்" என்ற இதழின் பொறுப்பாளராக பணியாற்றினார். பலராமா டைஜஸ்ட், மலையாள அமர் சித்ரா கதை, மேஜிக் பாட் அன்ட் வொய் டெல் மீ வொய் போன்ற அதன் பல சகோதர வெளியீடுகளின் வெளியீட்டில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.[2][3]

இறப்பு[தொகு]

மோகன், மாரடைப்பால் 12 திசம்பர் 2012 அன்று இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jacob, Thomas. "Mohippicha Oreyoru Mohan". Malayala Manorama [Kottayam] 13 December 2012: 10. Print.
  2. 2.0 2.1 2.2 Special Correspondent. "Today's Paper / NATIONAL : Journalist N.M. Mohan dead". பார்க்கப்பட்ட நாள் 2012-12-14.
  3. 3.0 3.1 3.2 "NM Mohan Antharichu". Malayala Manorama [Kottayam] 13 December 2012: 1. Print .
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எம்._மோகன்&oldid=3708234" இலிருந்து மீள்விக்கப்பட்டது