உள்ளடக்கத்துக்குச் செல்

என். இ. பலராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். இ. பலராம்
தொழில்துறை அமைச்சகம்
பதவியில்
4 அக்டோபர் 1970 – 24 செப்டம்பர் 1971
முன்னையவர்ப. இரவீந்திரன்
பின்னவர்டி. வி. தாமஸ்
மாநிலங்களவை உறுப்பினர் , கேரளம்
பதவியில்
1985–1994
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கேரள மாநிலப் பொதுச் செயலாளர்
பதவியில்
1971–1984
முன்னையவர்எஸ். குமரன்
பின்னவர்பி. கே. வாசுதேவன் நாயர்
கேரள சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1970–1977
முன்னையவர்கே. பி. ஆர். கோபாலன்
பின்னவர்பட்டியம் கோபாலன்
தொகுதிதலசேரி
பதவியில்
1960–1965
பதவியில்
1957–1960
முன்னையவர்உருவாக்கப்பட்டது
பின்னவர்இல்லாமல் ஆக்கப்பட்டது
தொகுதிமட்டன்னூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-11-20)20 நவம்பர் 1919
பிணறாயி, இந்தியா
இறப்பு16 சூலை 1994(1994-07-16) (அகவை 74)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்பங்கஜாக்சி
பிள்ளைகள்2 மகன்கள், 2 மகள்கள்

என். இ. பலராம் (N. E. Balaram) (20 நவம்பர் 1919-16 ஜூலை 1994) இந்திய மாநிலமான கேரளாவின் பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்.[1] இவர் ஒரு மார்க்சிய சித்தாந்தவாதியாகவும், இந்திய தத்துவ அறிஞராகவும் அறியப்பட்டார். மேலும் மலையாளத்தில் நன்கு அறியப்பட்ட இலக்கிய விமர்சகரான இவர் கேரளாவில் பொதுவுடைமை இயக்கத்தின் வரலாறு குறித்து எழுதினார். வரலாறு, மெய்யியல், அரசியல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் பல படைப்புகளையும் இவர் எழுதியுள்ளார்.

இவர் உலக இலக்கியத்தின் ஆர்வமுள்ள வாசகராகவும், மலையாள இலக்கியத்தின் விமர்சகராகவும் இருந்தார். பொருளாதாரம், இயற்பியல், வரலாறு, தத்துவம், அரசியல் மற்றும் தொல்லியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஒருமுறை, அவர் பாளி மொழி நிபுணர் என்பதை முழுமையாக அறிந்த விஜயநகரத்தில் அகழ்வாராய்ச்சி நடத்திய தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கு உதவ ஆந்திரப் பிரதேச முதலமைச்சரால் அழைக்கப்பட்டார். தனது கடைசி நாட்களில் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார். மேலும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதினார். இவரது குரல் எப்போதும் மதிப்புமிக்க மற்றும் உண்மையான தகவல்களையும் தெளிவான பகுப்பாய்வையும் கொண்டிருப்பதால் எதிரிகளால் கூட கேட்கப்பட்டது.

இறப்பு

[தொகு]

பலராம், ஜூலை 16,1994 அன்று தனது 75 வயதில் மாரடைப்பால் இறந்தார்.[2] இவருக்கு ஒரு மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் இருந்தனர். இவரது மகள் கீதா நசீர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._இ._பலராம்&oldid=4068419" இலிருந்து மீள்விக்கப்பட்டது