என். ஆர். இராசவரோதயம்
என். ஆர். இராசவரோதயம் N. R. Rajavarothiam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் திருகோணமலை | |
பதவியில் 1952–1963 | |
முன்னையவர் | எஸ். சிவபாலன், அஇதகா |
பின்னவர் | எஸ், எம். மாணிக்கராசா, இதக |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 அக்டோபர் 1908 |
இறப்பு | 27 ஆகத்து 1963 | (அகவை 54)
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
முன்னாள் கல்லூரி | புனித யோசப் கல்லூரி ஆனந்தா கல்லூரி கொழும்பு பல்கலைக்கழகம் |
இனம் | இலங்கைத் தமிழர் |
நவரத்தினசிங்கம் இரத்தினவரோதயம் இராசவரோதயம் (Navaratnasingam Ratnavarothiam Rajavarothiam, அக்டோபர் 8, 1908 - ஆகத்து 27, 1963) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]இராசவரோதயம் கிழக்கிலங்கையில் திருகோணமலையில் நவரத்தினசிங்கம் என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் கற்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார்.
அரசியலில்
[தொகு]இராசவரோதயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அதன் தீவிர உறுப்பினரானார். கட்சியின் உப-தலைவராக இருந்தவர். 1952 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் எஸ். சிவபாலனுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1]. இத்தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இருவர் மட்டுமே. இவர் 1956, மார்ச் 1960, சூலை 1960 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 155.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
வெளி இணைப்புகள்
[தொகு]- Panagoda days[தொடர்பிழந்த இணைப்பு], Memoirs of N.R.Rajavarothiam (நூலகம் திட்டம்)
- 1908 பிறப்புகள்
- 1963 இறப்புகள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- திருகோணமலை மாவட்ட நபர்கள்
- இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்