உள்ளடக்கத்துக்குச் செல்

என். அப்துல் காதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். அப்துல் காதர் (En: N. Abdul Khader - பிறப்பு 09-ஆகஸ்ட்-1933 இறப்பு 14-ஏப்ரல்-2021) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 1997 அக்டோபர் 10 முதல் 1998 ஜூன் 29 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக பணியாற்றினார்.[1]

அரசியல்

[தொகு]

அவர் அன்றைய தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையில் கே.கே. நயினார் முஹம்மதுக்கு மகனாக பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த அவர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். தமிழக காங்கிரசின் துணைத் தலைவராகவும், செயலாளராகவும் நீண்ட காலம் பனியாற்றியவர். காங்கிரஸ் பிரிவினையின் போது தமிழ் மாநில காங்கிரசு கட்சியில் பயணித்தவர், தொடர்ந்து 1997 அக்டோபர் 10 முதல் 1998 ஜூன் 29 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக பணியாற்றினார். அக்டோபர் 29, 1977 அன்று இந்திராகாந்தி மதுரைக்குச் சென்றபோது தி.மு.க -வின் தாக்குதலில் தன் கண்ணையே இழந்தவர்.[2],[3]

குடும்பம்

[தொகு]

என்.எம். அன்வர் அவர்களுக்கு ரசூல் மைதீன் என்ற மகன் இருக்கின்றார்.

இறப்பு

[தொகு]

14 ஏப்ரல் 2021 ல் சித்தையன்கோட்டையில் தனது 89 வயதில் இயற்கை எய்தினார்.[4],[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Members of the rajya Sabha - A|url=மாநிலங்களவை உறுப்பினர்_ வாழ்க்கை வரலாறு_புத்தகம்
  2. இந்திரா காந்திக்காக தன் கண்ணையே இழந்த அப்துல்காதர் காலமானார்
  3. -
  4. முன்னாள் காங்கிரஸ் எம்.பி காலமானார்
  5. https://twitter.com/SadamHu37539771/status/1382411350475898880 காங்கிரஸ் தலைவர்களுடன் திரு.காதர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._அப்துல்_காதர்&oldid=3943075" இலிருந்து மீள்விக்கப்பட்டது