என். அப்துல்ஸலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மௌலவி என். அப்துல்ஸலாம் ஆலிம் (பிறப்பு: மே 25 1959ல் இந்தியா உத்தமபாளையம் எனுமிடத்தில் பிறந்து, தற்போது திருச்சி தீரன் நகர் எனுப் பிரதேசத்தில் வாழ்ந்துவருகின்றார். இவர் ஒரு எழுத்தாளரும், கிப்லா இஸ்லாமிய மாத இதழின் இதழாசிரியரும், மறைஞானப் பேழை இதழின் உதவி ஆசிரியருமாவார். மேலும் திருச்சி, மதுரை வானொலியில் 50க்கும் அதிகமாக உரைகளை ஆற்றியுமுள்ளார்.

நூல்கள்[தொகு]

இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் வருமாறு

  • வாழவாழ நல்ல வழிகள் உண்டு
  • ஈமானுடன் வாழ்ந்திடுவோம்
  • கிப்லா ( வானொலி உரைகள்)
  • இஸ்லாம் வினாடி வினா

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

தமிழ்மாமணி - இஸ்லாமியத் தமிழ் இலக்கிய கழகம்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._அப்துல்ஸலாம்&oldid=2716349" இருந்து மீள்விக்கப்பட்டது