உள்ளடக்கத்துக்குச் செல்

என்றி கான்வே பெல்பீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்றி கான்வே பெல்பீல்ட்
Henry Conway Belfield
சிலாங்கூர் பிரித்தானிய முதல்வர்
பதவியில்
1901–1902
நெகிரி செம்பிலான் பிரித்தானிய முதல்வர்
பதவியில்
1902–1912
மலாயா கூட்டமைப்பு ஆளுநர்
பதவியில்
1908–1911
பேராக் மாநிலத்தின்
பிரித்தானிய முதல்வர்
பதவியில்
1911–1912
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 நவம்பர் 1855
இறப்பு8 சனவரி 1923
தேசியம்பிரித்தானியர்
பணிகுடியேற்ற நிர்வாகி

சர் என்றி பெல்பீல்ட் அல்லது என்றி கான்வே பெல்பீல்ட் (ஆங்கிலம்; மலாய்: Sir Henry Conway Belfield); KCMG; JP (29 நவம்பர் 1855 – 8 சனவரி 1923) என்பவர் பிரித்தானிய குடியேற்ற நிர்வாகி (Colonial Office); சிலாங்கூர் பிரித்தானிய முதல்வர் (1901 – 1902); நெகிரி செம்பிலான் பிரித்தானிய முதல்வர் (1902 – 1912); மலாயா கூட்டமைப்பு ஆளுநர் (1908 – 1911); பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் (1911 – 1912); ஆகிய பதவிகளை வகித்தவர் ஆவார். அன்றைய பிரித்தானிய ரெசிடென்ட் (British Resident) எனும் பிரித்தானிய முதல்வர் பதவி, இன்றைய மாநில மாநில முதல்வர் (Menteri Besar) பதவிக்குச் சமமானது.

1912-இல் கிழக்கு ஆப்பிரிக்கப் பிரித்தானிய பாதுகாவல் (East Africa Protectorate) குடியேற்றத்தில் (தற்போது கென்யா) ஆளுநராக (Governor of Kenya) நியமிக்கப்பட்டார். அதே காலக்கட்டத்தில், அதாவது 1914-இல் சான்சிபாரின் (Sultanate of Zanzibar) உயர் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். அவர் 1917 வரை சான்சிபார் ஆளுநராகப் பணியாற்றினார்.[1][2]

இவரின் பெயரில் பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில் ஒரு முதன்மைச் சாலைக்கு பெல்பீல்ட் சாலை (Belfield Street) என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[3]

வாழ்க்கை

[தொகு]
கோலாலம்பூர், செயின்ட் ஜான் உயர்நிலைப்பள்ளியில் என்றி கான்வே பெல்பீல்ட் நாட்டிய அடிக்கல் (1906)

அவர் இங்கிலாந்தின் தெற்கு டெவோனில் 29 நவம்பர் 1855 அன்று பிறந்தார். அவரின் தந்தையின் பெயர் ஜான் பெல்பீல்ட். தாயாரின் பெயர் எலிசா கான்வே பிரிட்ஜஸ் (Eliza Conway Bridges). இவர் வார்விசயர் நகரில் உள்ள ரக்பி பள்ளியிலும், ஆக்சுபோர்டில் உள்ள ஓரியல் கல்லூரியிலும் கல்வி பயின்றார். 1880-இல் இன்னர் டெம்பிள் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

பதவிகள்

[தொகு]

1884-ஆம் ஆண்டு சிலாங்கூர் குடிமைப் பணியில் நீதித்துறை அதிகாரியாக (மாஜிஸ்திரேட்) சேர்ந்தார். பின்னர் 1888-ஆம் ஆண்டு சிலாங்கூரின் தலைமை நீதித்துறை அதிகாரியாகவும்; பின்னர் 1892-ஆம் ஆண்டு பேராக்கின் மூத்த நீதித்துறை அதிகாரியாகவும் பொறுப்புகள் வகித்தார்.

1896-ஆம் ஆண்டு மலாயா மாநிலங்களின் கூட்டமைப்பில் நிலங்கள் மற்றும் சுரங்கங்களுக்கான முதல் ஆணையராகப் பொறுப்பேற்றார். பல வேளைகளில் சிலாங்கூர் பிரித்தானிய முதல்வராகவும் செயல்பட்டார் அத்துடன் நெகிரி செம்பிலான் பிரித்தானிய முதல்வர் (1902 – 1912); மலாயா கூட்டமைப்பு ஆளுநர் (1908 – 1911); பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் (1911 – 1912) ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sir Henry Conway Belfield- British East Africa". The Great War (1914-1918) Forum. 25 March 2023. Retrieved 21 December 2025.
  2. "Governor of EAP from 1912-17, he had previously served exclusively in the Federated Malay States in Selangor and Negri Sembilam from the year 1896. He was a man of wide culture and strong intellect". Europeans In East Africa (in ஆங்கிலம்). Retrieved 21 December 2025.
  3. "Belfield Street | IpohWorld's World". 13 February 2019. Retrieved 21 December 2025.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • Report Upon the Present Condition of Affairs in Labuan and Brunei (1905)
  • Handbook of the Federated Malay States (1906)
  • Gold Coast. Report Legislation Governing Alienation Native Lands Gold Coast Colony Ashanti (1912)

கூடுதல் சான்றுகள்

[தொகு]
  • Wright, Arnold, Twentieth Century Impressions of British Malaya: Its history, people, commerce, industries and resources, 1908

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_கான்வே_பெல்பீல்ட்&oldid=4426762" இலிருந்து மீள்விக்கப்பட்டது