என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிறித்துவக் கம்பர் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு எனும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. இவர் எழுதியனவாகச் சொல்லப்பெரும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்பன இப்பொழுது கிடைத்தில. இரட்சணிய மனோகரத்தின் பெரும்பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றது ஆகும். இவரைக் கிறித்துவக் கம்பர் எனப் புகழ்வர்.

இவரது படைப்புகள்[தொகு]

  • போற்றித் திருவருகல்
  • இரட்சணிய யாத்திரிகம்
  • இரட்சணிய மனோகரம்
  • இரட்சணிய குறள்
  • இரட்சணிய பாலா

வெளி இணைப்புகள்[தொகு]