என்றி ஆந்திரூசு
என்றி ஆந்திரூசு (Henry Andrews) (1744 – 26 ஜனவரி 1820[1]) இங்கிலாந்து நாட்டு இலங்காசயரில் கிராந்தம் அருகே அமைந்த பிரீசுட்டனில் பிறந்தார். இவர் சிறந்த கணிதவியலாளராகவும் வானியலாளராகவும் புகழெய்தியவர் ஆவார்.
ஓல்டு மூர் வான்பொருள் பஞ்சாங்கத்திற்காக 43 ஆண்டுகள் தன் ஓய்வு நேரத்தில் 'கோள்களின் இயக்கத்தை விவரிக்கும் தொகுப்பாளராக' பணியாற்றியுள்ளார். இவரது பணி அகலாங்கு வாரியத்துக்கான கணக்கீடு செய்வதே. இவர் ஒரு உண்டுறையும் பள்ளியை நடத்தி அதில் முக்கோண அளவியலும் கூடுதல் பாடமாகக் கலமோட்டல் பற்றியும் கற்பித்துள்ளார். புத்தகம், எழுதுபொருள், அழுத்த அளவி, வெப்ப அளவி, அளவைக் கருவி ஆகியன விற்கும் கடையும் நடத்தியுள்ளார். அரசு வானியலாளரான மாண்புறு நெவில் மாசுக்கெலைனுக்கு தொழில்முறை அறிவுரைஞராக விளங்கியுள்ளார்.
1791 ஆம் ஆண்டுக்கான சூரிய ஒளிமறைப்பைப் பின்வருமாறு இவர் முன்கணித்துள்ளார்:
- இசுகாட்லாந்துக்கு வடக்கே மிகப் பெரிய ஒளிமரைப்பு ஏற்படும்; சூரியத் தோற்றநிலை விட்ட அளவால் எங்குமே முழு ஒளிமறைப்பு நிகழாது. ஒளிபுகா நிலாவின் எப்புறமும் அழகிய ஒளி வலயத்தைப் பார்வையாளர்கள் காண முடியும். கரோலினா, வர்ஜீனியா பின்ணணியில் கதிரெழும் வேளையில் ஒளிமறைப்பு தொடங்கும். அங்கிருந்து அட்சன் குடாவுக்குச் செல்லும். பிறகு வடகிழக்காக கிரீன்லாந்து, அய்சுலாந்து, இலாப்லாந்து கடற்கரை நோக்கிப் புறப்படும். பின்னர் கிரேட் தார்த்தாரி வட கடற்கரைக்குச் சென்று கதிர்மறையும் வேளையில் ஒளிமறைப்பு புவியை விட்டு விலகி முடிவுறும்.
மேற்கோள்கள்
[தொகு]- "Andrews, Henry (1743-1820)". Dictionary of National Biography 1. (1885). London: Smith, Elder & Co.
- "Addition to the Obituary". The Gentleman's Magazine. London. December 1820. pp. 689–690. பார்க்கப்பட்ட நாள் 31 August 2020.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Mr. Henry Andrews". The Gentleman's Magazine. London. February 1820. p. 182. பார்க்கப்பட்ட நாள் 31 August 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- Works by என்றி ஆந்திரூசு at LibriVox (public domain audiobooks)