என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட்
Hendrik C. van de Hulst
Hendrik C. van de Hulst 1977.jpg
1977 இல் என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட்
பிறப்புநவம்பர் 19, 1918(1918-11-19)
ஊட்ரெக்ட், நெதர்லாந்து
இறப்பு31 சூலை 2000(2000-07-31) (அகவை 81)
லைடன், நெதர்லாந்து
தேசியம்இடச்சு
துறைவானியல்
பணியிடங்கள்லைடன் பல்கலைக்கழகம்
அறியப்படுவது21 செமீ மீநுண் வரி
விருதுகள்என்றி டிரேப்பர் விருது (1955)
எடிங்டன் விருது (1955)
இரம்போர்டு விருது (1964)
புரூசு விருது (1978)
கார்ல் சுவாட்சில்ட் விருது (1995)

என்றிக் கிறிஸ்டோபல் வான் தெ அல்ஸ்ட் (Hendrik Christoffel "Henk" van de Hulst[1] 19 நவம்பர் 1918 - 31 சூலை 2000) ஒரு டச்சு வானியலாரும். கணிதவியலாரும் ஆவார்.

உட்ரெச்ட்இல் 1944இல் மாணவராக இருந்தபோதே இவர் நொதுமல்நிலை உடுக்கணவெளி நீரகத்தில் 21 செமீ மீநுண் வரி நிலவுவதை முன்கணித்தார். இவ்வரி கண்டறியப்பட்ட்தும் இவர் ஜான் ஊர்ட், சி. ஏ. முல்லர் ஆகியோருடன் இணைந்து புதிய கண்டுபிடிப்பின் ஒளியில் நமது விண்மீன் பேரடையான பால்வழியின் (Milky way) நொதுமல்நிலை நீரகப் பரவலைக் கதிர் வானியல் முறையால் வரைந்தார். இது அதன் சுருளி வடிவக் (spiral) கட்டமைப்பை வெளிப்படுத்தியது.

தான் ஓய்வுபெற்ற 1984 வரை வாழ்நாள் முழுவதும் லைடன் பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் வானியலில் விரிவாகப் பல ஆய்வுகளை மேற்கொண்டார். சூரிய ஒளிமுகட்டையும் உடுக்கணவெளி முகில்களையும் ஆய்வு செய்தார். 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு பன்னாட்டு விண்வெளித் திட்டங்களின் தலைவரானார்.[2]

தகைமைகள்[தொகு]

விருதுகள்
  • என்றி டிரேப்பர் விருது, அமெரிக்கத் தேசிய அறிவியல் கழகம் (1955)[3]
  • எடிங்டன் விருது, அரசு வானியல் கழகம் (1955)
  • புரூசு விருது, பசிபிக் வானியல் கழகம் (1978)[4]
  • கார்ள் சுவார்சுசைல்டு விருது]], Astronomische Gesellschaft (1995)
இவர் பெயரிடப்பட்டவை

மேற்கோள்கள்[தொகு]

  1. எஆசு:10.1098/rsbm.2001.0028
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. "Hulst, Hendrik Christoffel van de." in Encyclopædia Britannica (2010)
  3. "Henry Draper Medal". National Academy of Sciences. பார்த்த நாள் 24 பெப்ரவரி 2011.
  4. "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. பார்த்த நாள் 24 பெப்ரவரி 2011.

நூல்தொகை[தொகு]