என்ன் நின்டே மொகிதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


என்ன் நின்டே மொய்தீன் (தமிழாக்கம்: என்றும் உன் மொகிதீன் / இப்படிக்கு உன் மொகிதீன் )
200px
திரைப்பட காட்சிப்படம்
இயக்கம்ஆர். எஸ். விமல்
தயாரிப்புசுரேஷ் ராஜ்
பினோய் ஷங்கரத்
ராகி தோமஸ்
கதைஆர். எஸ். விமல்
கதைசொல்லிகரமன சுதீர்
இசைபாடல்கள்:
ம. ஜெயசந்திரன்
ரமேஷ் நாராயணன்
கோபி சுந்தர்
பின்னணி இசை:
கோபி சுந்தர்
நடிப்புபார்வதி திருவோத்து
பிரிதிவிராஜ் சுகுமாரன்
ஒளிப்பதிவுஜோமோன் தீ ஜான்
படத்தொகுப்புமகேஷ் நாராயணன்
கலையகம்நியூட்டன் மூவீஸ்
விநியோகம்சென்ட்ரல் பிக்சர்ஸ்
வெளியீடு19 செப்டம்பர் 2015 (2015-09-19)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு12 கோடி[1]
மொத்த வருவாய்50 கோடி

'''என்ன் நின்டே மொகிதீன்''' (தமிழாக்கம்: என்றும் உன் மொகிதீன்/இப்படிக்கு உன் மொகிதீன்) மலையாள மொழி வாழ்க்கை வரலாற்று காதற்திரைப்படமாகும். இதனை ஆர். எஸ். விமல், காஞ்சனமாலை மற்றும் ப.பொ.மொகிதீனின் மெய் வாழ்க்கை கதையை தழுவி இயக்கப்பட்டது[2].

கதைப்போக்கு[தொகு]

1960 மற்றும் 70களில், கேரளத்தில் உள்ள முக்கம் எனும் ஊரில், இந்து சமயத்தின் உயர்குடியில் பிறந்த காஞ்சனமாலை(காஞ்சனமாலா) மற்றும் புகழ்பெற்ற இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த மொகிதீன்(மொய்தீன்) எனும் இருவருக்கும் இடையே மூண்ட காதல் கதையே இத்திரைப்படம்.

மொகிதீன் ஒரு சமூக அரசியல் ஈடுபாட்டாளராகவும் மற்றும் காஞ்சனமாலை மருத்துவம் பயிலும் துணிவு நிறைந்த மாணவியாகவும் இருந்துவந்தனர். இவர்களுக்குள் காதல், அஞ்சல்கள் வழியே மலர, இருவரும் அவர்களுக்கென அஞ்சல் மொழியையும் வளர்த்துக்கொண்டனர்.

ஒருபுறம், காஞ்சனமாலையின் பழங்கால கட்டுப்பாட்டு குணங்கள்மிகுத்த உறவினர்களுக்கு அறியவரும்போது, அவளை தாக்கினர். மறுபுறம், மொகிதீனின் தந்தை அவனது காதலை ஏற்க மறுத்து, கத்தியால் குத்திவிட்டு, காவலர்களிடம் ஒப்புக்கொண்டு சிறைச்செல்கிறார். எப்பாடோ, மொகிதீன் உயிர் பிழைத்த கொள்கிறான்.

நீயதிமன்றத்தில், வழக்கு விசாரணையின் போது, மொகிதீன்,  நடந்தது அனைத்தும் விபத்து மட்டுமே, தனது தந்தைக்கும் இதற்கும் ஏது தொடர்புமில்லை எனக்கூறி தந்தையை காப்பாற்றுகிறார். மகனது இம்மனம் நெருடும் செயல், தந்தையின் மென்குணத்தை வெளிகொண்டுவந்தது. எனினும், மறுநாளையே, தனது உயிரை துறந்தார் தந்தை.

ஈற்றில், மொகிதீனும் காஞ்சனமாலையும் உடன்வெளியேற முடிவுச்செய்கின்றனர். கடவுசீட்டுகளை பெற்று வரும்போது, வந்த படகு நீர்ச்சுழியில் மாட்டிக்கொண்டு கவிழ்த்துவிட, மற்ற உயிர்களை காத்து ஈற்றில் தனது உயிரை துறக்கிறான் மொகிதீன்.

இதனை அறிந்த காஞ்சனமாலை தன்னுயிர் மாய்த்துக்கொள்ள முயலும்போது, தடுத்து காப்பாற்றப்பட்டு, ஈற்றில் மொகிதீனின் தாயார் அவளை தன்னில்லதிற்கே கூட்டிசெல்கிறார்.

காஞ்சனமாலை தற்போது வரை வாழும் கைம்பெண்ணாக இருந்துவருகிறார்.

கதாபாத்திரங்கள்[தொகு]

பிரிதிவிராஜ் சுகுமாரன் - மொகிதீன்

பார்வதி திருவொத்து - காஞ்சனமாலை

டொவினோ தோமஸ் - பெரும்பரம்பில் அப்பு

உருவாக்கம்[தொகு]

இக்கதை இருவஞ்சிப்புழை ஆறு மற்றும் முக்கம் சிற்றூரை கதைக்களமாக கொண்டுள்ளது. இயக்குனர் விமல், முதலில் கோப்பு படமாக உருவாக்க எண்ணி, ஈற்றில் முழுநீள திரைப்படமாக உருவாக்கினார்.

2014யில், காஞ்சனமாலா "கதை சரியாக அமைக்கப்படவில்லை" என்று இயக்குனர் மீது புகார் தொடுத்தார்.

ஒலிப்பதிவு[தொகு]

இப்படத்தின், "முக்கத்தே பெண்ணே" எனும் பாடல் 5 நிமிடங்களில் தொடுக்கப்பட்டது. மேலும், "காத்திருன்னு" எனும் பாடலை இயற்றியதற்காக, ம. ஜெயச்சந்திரன் "நாட்டின் சிறந்த இசையமைப்பு"இன் விருதைப்பெற்றார். [3]

எண் தலைப்புபாடகர்(கள்) நீளம்
1. "ஈ மழதன்"  க. ஜோ. இயேசுதாஸ் 4:07
2. "கண்ணோண்டு சொல்லண்"  இஷ்ரேய கோஷல், விஜய் இயேசுதாஸ் 4:51
3. "காத்திருன்னு"  இஷ்ரேய கோஷல் 4:18
4. "ஷரதாம்பரம்"  ப. ஜெயசந்திரன், ஷில்பா ராஜ் 2:38
5. "இருவஞ்சி புழப்பெண்ணே"  ம. ஜெயசந்திரன் 4:14
6. "ப்ரியமுள்ளவனே"  மதுஸ்ரீ நாராயண் 3:27
7. "முக்கத்தே பெண்ணே"  மு. மக்பூல் மன்சூர், கோபி சுந்தர் 4:15
8. "ஷரதாம்பரம்"  ஷில்பா ராஜ் 2:39
9. "ஈ மழதன்"  க. ஜோ. இயேசுதாஸ், சுஜாதா மோகன் 4:07

வெளியீடு[தொகு]

கேரளவினுள் 19 செப்டம்பர் 2015-லும், கேரளாவின் வெளியே 2 அக்டோபரிலும் வெளியானது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை, ஏசியநெட் 7 கோடி மதிப்பீட்டில் பெற்றது, இதுவரை, மலையாள உலகில், இவ்வுயர் தொகைக்கொண்டு பெறப்பெற்ற திரைப்படம் இதுவேவாகும்.

திரைப்பட விழா திரையிடல்[தொகு]

கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.கே) 20 வது பதிப்பின் மலையாள சினிமா டுடே பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு படங்களில் இந்த படம் ஒன்றாகும். [4] இருப்பினும், போட்டிப் பிரிவில் சேர்க்கப்படாததால் படத்தை திருவிழாவிலிருந்து விலக்க இயக்குநர் ஆர்.எஸ்.விமல் முடிவு செய்தார். [5]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

28 மார்ச் 2016 நிலவரப்படி, என்னு நின்டே மொய்தீன் 55 வெற்றிகளையும் 63 பரிந்துரைகளையும் பெற்றார்.

  1. "Content triumphed over star power in southern filmdom (2015 in Retrospect)". Business Standard. Indo-Asian News Service. 19 December 2015. Archived from the original on 19 December 2015. https://web.archive.org/web/20151219095125/http://www.business-standard.com/article/news-ians/content-triumphed-over-star-power-in-southern-filmdom-2015-in-retrospect-115121900185_1.html. பார்த்த நாள்: 19 December 2015. 
  2. "IBNLive Movie Awards 2016: Nominees for Best Actress (South)". "Parvathy was lauded for her efforts in Malayalam romantic thriller 'Ennu Ninte Moideen'."
  3. Elizabeth Thomas (3 October 2015). "Five-minute composition gets 10 lakh hits".Deccan Chronicle. Retrieved 22 October 2015.
  4. Press Trust of India (13 October 2015). "Nine Malayalam movies to be screened in IFFK". Business Standard. Retrieved 15 October 2015.
  5. Asha Prakash (13 October 2015). "Ennu Ninte Moideen backs out of IFFK". The Times of India. Retrieved 15 October 2015.