உள்ளடக்கத்துக்குச் செல்

என்னினமே என் சனமே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"என்னினமே என் சனமே" என்ற பாடலானது 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் வெளிவந்த "வேங்கைகளின் விடுதலை வேதங்கள்" என்னும் பாடல் தொகுப்பில் இடம்பெற்ற பாடலாகும். கவிஞர் நாவண்ணன் எழுதிய வரிகளில் இசைவாணர் கண்ணனின் இசையில் இப்பாடலைப் பாடியவர் பொன் சுந்தரலிங்கம் அவர்கள். இது கவிஞர் நாவண்ணனின் முதலாவது பாடலாகும். இப்பாடலானது போராளி ஒருவர் பாடுவதாக அமைந்தது. தன்னலம் துறந்த போராளிக்கும் சமூகத்துக்குமான உறவின் வெளிப்பாடானது இப்பாடல்.

முழுப் பாடல்

[தொகு]

என்னினமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகிறதா?
எனது குரல் புரிகிறதா?

என்னினமே...


மண்ணை இன்னும் நேசிப்பவன் - அதனால்
மரணத்தையே யாசிப்பவன்

என்னினமே...


அன்னை தந்தை எனக்குமுண்டு
அன்பு செய்ய உறவுமுண்டு
என்னை நம்பி உயிர்களுண்டு
ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு - எனினும்
மண்ணை இன்னும் நேசிப்பவன் - அதற்காய்
மரணத்தையே யாசிப்பவன்

என்னினமே...


பாசறை நான் புருந்த இடம்
பதுங்குகுழி உறங்குமிடம்
தேசநலன் எனது கடன்
தேன் தமிழே எனது திடம் – அதனால்
மண்ணை இன்னும் நேசிப்பவன் - அதற்காய்
மரணத்தையே யாசிப்பவன்

என்னினமே...


என்முடிவில் விடிவிருக்கும்
எதிரிகளின் அழிவிருக்கும்
சந்ததிகள் சிரித்து நிற்க
சரித்திரத்தில் நிறைந்திருப்பேன் - அதனால்
மண்ணை இன்னும் நேசிப்பவன் - அதற்காய்
மரணத்தையே யாசிப்பவன்

என்னினமே...


மேற்கோள்கள்

[தொகு]
  • 'தமிழீழ எழுச்சிப் பாடல்கள் - பாகம் 01' நூல் (1991).
  • முரசொலி-1991.08.09 - பக். 02.
  • ஈழநாதம்-1990.12.02 - பக். 01, 04.
  • "நாவண்ணன் பற்றி....". மட்டுவில் ஞானக்குமாரன். ஏப்ரல் 2008. https://www.geotamil.com/pathivukal/madduvilan_on_navannan.htm. 
  • "ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம்". கானா பிரபா. 24 November 2014. http://www.madathuvaasal.com/2014/11/blog-post.html?m=1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னினமே_என்_சனமே&oldid=4337166" இலிருந்து மீள்விக்கப்பட்டது