என்னவளே அடி என்னவளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"என்னவளே அடி என்னவளே"
ஒலிச்சுவடு பாடலை பாடியவர்கள் பி. உன்னிகிருஷ்ணன்

காதலன் திரைப்படத்திலிருந்து

வெளிவந்த ஆண்டு 1994
வகை ஒலிச்சுவடு
பாடலாசிரியர் வைரமுத்து
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்

என்னவளே அடி என்னவளே என்பது 1994 இல் வெளிவந்த காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதினார். பி. உன்னிகிருஷ்ணன் பாடினார். ஏ. ஆர். ரகுமான் இப்பாடலுக்கு இசை அமைத்திருந்தார்.

இத்திரைப்படத்திற்காக தமிழில் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதை ஏ. ஆர். ரகுமான் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றார். பி. உன்னிகிருஷ்ணன் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதை தனது இந்த அறிமுகப் பாடலில் வென்றார். [1]

பாடல் வரிகள்[தொகு]

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

உந்தன் கால்கொலுசில்
அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி

காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப்
பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி

இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு
போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்

என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

உசாத்துணை[தொகு]

  1. ""என் இசைவாழ்க்கை அடையாளம் பெற அந்தக் குருவாயூரப்பன்தான் காரணம்! - பாடகர் உன்னிகிருஷ்ணன்" #WhatSpiritualityMeansToMe". நவம்பர் 25, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 25, 2020 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னவளே_அடி_என்னவளே&oldid=3421556" இருந்து மீள்விக்கப்பட்டது