என்கைட்ரிசு
என்கைட்ரிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோமாலாப்சிடே
|
பேரினம்: | என்கைட்ரிசு சோனினி & லேட்ரெலே, 1802[1]
|
சிற்றினம் | |
6, உரையினை காண்க |
என்கைட்ரிசு (Enhydris) என்பது கோமலோப்சிடே குடும்பத்தில் உள்ள சற்றே விடமுள்ள, பின்பற்கள் கொண்ட பாம்பு ஒரு பேரினமாகும். இந்த பேரினமானது இந்திய-ஆத்திரேலிய பிராந்தியத்தின் வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2]
சிற்றினங்கள்
[தொகு]பின்வரும் 6 சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[1][3]
- என்கைட்ரிசு சனார்டி மர்பி & வோரிஸ், 2005
- என்கைட்ரிசு என்கைட்ரிசு (ஷ்னீடர், 1799)
- என்கைட்ரிசு இன்னோமினாட்டா (மோரிஸ், 1875)
- என்கைட்ரிசு ஜாகோரி (டபிள்யூ. பீட்டர்ஸ், 1863)
- என்கைட்ரிசு லாங்கிகாடா (போர்ரெட், 1934)
- என்கைட்ரிசு சப்டேனியாட்டா (போர்ரெட், 1934)
பல கூடுதல் சிற்றினங்கள் பாரம்பரியமாக இங்கு வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது பெரும்பாலும் சப்செசர் மற்றும் சூடோபெரேனியா போன்ற பேரினத்தின் கீழ் இவை வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு சிற்றினம், என்கைட்ரிசு சுமிதி (பெளலஞ்சர் 1914), ஊர்வனவியலாளர்கள் சுமித் (1943), தாசு (2010) மற்றும் வாலாச் உள்ளிட்டோரால் (2014) ஏற்றுக்கொள்ளப்பட்ட சிற்றினமாகும். 2014, ஆனால் காக்சு உள்ளிட்டோர் (1998), மற்றும் மர்பி & வோரிசு 2014. என்கைட்ரிசு, ஜாகோரியின் ஒத்த இனமாகக் கருதினர்.
குறிப்பு : மேலே உள்ள பட்டியலில், அடைப்புக்குறிக்குள் உள்ள ஒரு இருசொல் இந்த சிற்றினம் முதலில் என்கைட்ரிசு அல்லாத ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]ஜாகோரி மற்றும் சிமிதி என்ற குறிப்பிட்ட சிற்றினப் பெயர்கள் முறையே செருமனி இயற்கை ஆர்வலர் பெடோர் ஜாகோர் மற்றும் இங்கிலாந்து ஊர்வன ஆய்வாளர் மால்கம் ஆர்தர் சுமித் ஆகியோரின் நினைவாக இடப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Enhydris ". Dahms Tierleben. www.dahmstierleben.de
- ↑ Goin CJ, Goin OB, Zug GR (1978). Introduction to Herpetology, Third Edition. San Francisco: W.H. Freeman. xi + 378 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-0020-4. (Genus Enhydris, pp. 326-327).
- ↑ "Enhydris ". ITIS (Integrated Taxonomic Information System). www.itis.gov.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Enhydris jagorii, p. 132; Enhydris smithi, p. 247).