உள்ளடக்கத்துக்குச் செல்

எனிசை கிர்கிசு ககானரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எனிசை கிர்கிசு ககானரசு
840–925–1203[1] or 1207[2]
9ஆம் நூற்றாண்டில் இதன் அதிகபட்ச பரப்பளவின் போது
9ஆம் நூற்றாண்டில் இதன் அதிகபட்ச பரப்பளவின் போது
நிலைபேரரசு
தலைநகரம்துவா (970 முதல்)[3]
பேசப்படும் மொழிகள்பழைய துருக்கிய மொழி
சமயம்
தெங்கிரி மதம்
அரசாங்கம்முடியரசு
பார்சு பெக்
வரலாறு 
• தொடக்கம்
840–925
• முடிவு
1203[1] or 1207[2]
முந்தையது
பின்னையது
உயுகுர் ககானரசு
லியாவோ அரசமரபு
மங்கோலியப் பேரரசு

எனிசை கிர்கிசு ககானரசு என்பது ஒரு துருக்கியப் பேரரசு ஆகும். இது 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களுக்கு இடையில் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு நீடித்திருந்தது. இது எனிசை கிர்கிசு மக்களை ஆண்டது. அம்மக்கள் தெற்கு சைபீரியாவில் 6ஆம் நூற்றாண்டு முதல் வசித்து வந்தனர். 9ஆம் நூற்றாண்டின் போது தங்களை ஆண்டுவந்த உய்குர்கள் மீது கிர்கிசுகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இந்தப் பேரரசானது 840 முதல் 1207 வரை ககானரசாக நிறுவப்பட்டிருந்தது.[2] இந்த ககானரசின் நிலப்பரப்பானது அதன் அதிகபட்ச பரப்பளவின் போது, குறுகிய காலத்திற்கு கிர்கிசுத்தான், கசக்கஸ்தான், உருசியா, சீனா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் பகுதிகளை தன்னகத்தே கொண்டிருந்தது. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, எனிசை கிர்கிசு நாட்டைப் பற்றியுள்ள தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்தக் கானரசானது அதன் பூர்வீகத் தாயகத்தில் 1207ஆம் ஆண்டு வரை எஞ்சியிருந்தது என நம்பப்படுகிறது. .

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of Central Asia". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 8 November 2016.
  2. 2.0 2.1 Drompp, Michael (January 2002) (in en). The Yenisei Kyrgyz from Early Times to the Mongol Conquest. https://www.academia.edu/10197431. 
  3. Mustafa Kalkan, (2005), “Kırgız Boylarının Yenisey’den Çıkarılmaları ve Coğrafî Dağılımları”, (in Turkish), Erdem: Atatürk Kültür Merkezi Dergisi, Vol: 15, No: 47, Page: 77-100.[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எனிசை_கிர்கிசு_ககானரசு&oldid=3789371" இலிருந்து மீள்விக்கப்பட்டது