எனது இந்தியா (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எனது இந்தியா நூல் ஆங்கிலப் புத்தகமான மை இந்தியாவின் (My India) தமிழாக்கமாகும். யுவன் சந்திரசேகர் இதை மொழிபெயர்த்துள்ளார். மிகவும் புகழ் பெற்ற வேட்டை இலக்கியக்காரரான "எட்வர்ட் ஜேம்ஸ் ஜிம் கார்பெட்" எழுதிய புகழ் பெற்ற நூல்.[1][2] மனித மனத்தின் குரூரத்திற்கு வேட்டையாடாமல், சக மனிதர்களைத் தாக்கும் ஆட்கொல்லி மிருகங்களை வேட்டையாடுபவர். அவரது வேட்டை அனுபவங்களே இந்நூல். அவரது மனிதப் பண்பும் , கனிவும் வழிந்தோடும் பக்கங்கள் அடங்கிய நூல். இரயில்வேயின் சரக்குப் பிரிவில் ஒப்பந்ததாரராக பணியாற்றி சக ஊழியர்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர். இந்திய மக்களின் மேல் கரிசனம் கொண்டவர் இவர். இவரது சிறு வயதுமுதலே வேட்டையாடுதலில் ஈடுபடத்தொடங்கியவரின் அனுபவங்களின் தொகுப்பே இந்நூல். மனிதர்களை மட்டுமல்ல மிருகங்களையும் வனங்களையும் மிகத்துல்லியமாக இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இவரது புத்தகங்களை வேட்டை இலக்கியம் என்று வகைப்படுத்துவர்.

இவர் பதிவு செய்யும் காட்சிகள் வனத்தில் இயற்கையின் சமநிலையையும், வனவிலங்குகளும் தமக்கென ஒரு சட்டதிட்டங்களுடன் இயங்குகின்றன என்பதை சொல்வதாகவும் இருக்கின்றன. 77 மணி நேரம் வனத்தில் அகப்பட்டுக்கொண்ட இரு சிறு குழந்தைகள் (புடாலி 2 வயது, புன்வா 3 வயது) எந்த ஒரு வன விலங்காலும் தாக்கப்படாமல் மீட்கப்பட்டதையும், பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு ஆட்டுக்குட்டியை கொல்லாமல் பரிவோடு விட்டுச் சென்ற பெண்புலியையும் சுட்டிக்காட்டி, வனத்தின் இத்தகைய எழுதப்படாத சட்டம் மக்களிடம் இல்லை என்று குறிப்பிடுகிறார். ஹிட்லரது போர்க் கொடூரங்களோடு ஒப்பிட்டு,வலிமையானவர்களிடம் பலவீனர்களை நோக்கிய இத்தகைய பரிவு இருந்திருந்தால் உலகில் போர் இருந்திருக்காது என்ற தன் கருத்தை பதிவு செய்கிறார்.

இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எனது_இந்தியா_(நூல்)&oldid=3236071" இருந்து மீள்விக்கப்பட்டது