எனது அஞ்சல் தலை திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது அஞ்சல் தலை (My Stamp scheme) இந்திய அஞ்சல் துறை வருவாயை ஈட்டும் முயற்சியில் 2011-ஆம் ஆண்டு முதல் தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மை ஸ்டாம்ப் என்ற தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடும் திட்டத்தை துவக்கியது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு தனிநபர் ரூபாய் 300 செலுத்தினால் போதும். இத்திட்டத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமே அஞ்சல் தலைகளை வெளியிட முடியும். இறந்து போனவர்களுக்கு அஞ்சல் தலைகளை பெற முடியாது. ஒரு தொழில் அல்லது வணிக நிறுவனம் தங்களது புகைப்படம் அல்லது சின்னத்தை அஞ்சல் தலையில் அச்சிட்டு வெளியிட ரூபாய் 12 இலட்சம் தொகை செலுத்தினால் மட்டுமே இந்திய அஞ்சல் துறை அச்சிட்டு வெளியிடுகிறது.[1]12 இலட்சம் பணம் செலுத்தியவர் 60,000 அஞ்சல்தலைகளை உள்ளடக்கிய 5,000 தாள்களைப் பெறுவார். இந்த முத்திரைகள் பொது அஞ்சலுக்குப் பயன்படுத்தப்படலாம். மேலும் இவ்வகையான அஞ்சல் தலைகள் அஞ்சற்றலையியல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.[2][3][4]

முன்னதாக, இந்தியா போஸ்ட் ரூ 300 ‘மை ஸ்டாம்ப்’ தாளில் தபால்தலைக்கு அடுத்ததாக புகைப்படம் அல்லது வடிவமைப்பை அச்சிட மட்டுமே அனுமதித்தது. இதுவரை இந்திய அஞ்சல் துறையின் இணையவழி தளமான அமேசான் இந்தியா மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றிற்கான தனிப்பயனாக்கப்பட்ட எனது அஞ்சல் தலையை வெளியிட்டது. எனது அஞ்சல் தலை திட்டத்தின் மூலம் இந்திய அஞ்சல் துறை, 2016-17 நிதியாண்டில் ரூ 2 கோடி பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. எனது அஞ்சல் தலை
  2. India Post opens ‘My Stamp’ scheme for individuals, corporate
  3. India Post opens ‘My Stamp' scheme for individuals and corporate
  4. "MY STAMP OF INDIA POST". Archived from the original on 2021-01-09. பார்க்கப்பட்ட நாள் 2021-01-07.

வெளி இணைப்புகள்[தொகு]

  • My Stamp
  • Personalised Stamps of India
  • 'மை ஸ்டாம்ப்' வடிவில் வரம்புமீறல்: ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டுவர எதிர்பார்ப்பு [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எனது_அஞ்சல்_தலை_திட்டம்&oldid=3802177" இலிருந்து மீள்விக்கப்பட்டது