உள்ளடக்கத்துக்குச் செல்

எத்தில் புரோமோ அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தில் புரோமோ அசிட்டேட்டு
Ethyl bromoacetate
Skeletal formula of ethyl bromoacetate
Ball-and-stick model of ethyl bromoacetate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் புரோமோ அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
எத்தில் 2-புரோமோ அசிட்டேட்டு
புரோமோ அசிட்டிக் அமிலம்,எத்தில் எசுத்தர்
அண்டோல்
ஈதாக்சிகார்போனைல்மெத்தில் புரோமைடு
இனங்காட்டிகள்
105-36-2 Y
ChEMBL ChEMBL1085948 Y
ChemSpider 7462 Y
EC number 203-290-9
InChI
  • InChI=1S/C4H7BrO2/c1-2-7-4(6)3-5/h2-3H2,1H3 Y
    Key: PQJJJMRNHATNKG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H7BrO2/c1-2-7-4(6)3-5/h2-3H2,1H3
    Key: PQJJJMRNHATNKG-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7748
வே.ந.வி.ப எண் AF6000000
  • BrCC(=O)OCC
UNII D20KFB313W Y
UN number 1603
பண்புகள்
C4H7BrO2
வாய்ப்பாட்டு எடை 167.00 g·mol−1
தோற்றம் நிறமற்றது, நீர்மம்
அடர்த்தி 1.51 கி/செ.மீ3
உருகுநிலை −38 °C (−36 °F; 235 K)
கொதிநிலை 158 °C (316 °F; 431 K)
கரையாது
-82.8·10−6செ.மீ3/மோல்
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H310, H330
P260, P262, P264, P270, P271, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P320, P321, P322
தீப்பற்றும் வெப்பநிலை 47 °C (117 °F; 320 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் எத்தில் அசிட்டோ அசிட்டேட்டு
எத்தில் அயோடோ அசிட்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

எத்தில் புரோமோ அசிட்டேட்டு (Ethyl bromoacetate) என்பது CH2BrCO2C2H5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோமோ அசிட்டிக் அமிலத்தின் எத்தில் எசுத்தர் வகைச் சேர்மமான இது அசிட்டிக் அமிலத்திலிருந்து இரண்டு படிநிலைகளில் தயாரிக்கப்படுகிறது. [1] கண்ணீர் வரவழைக்கும் பண்பைக் கொண்டதாகவும் கார நெடியுடனுடனும் எத்தில் புரோமோ அசிட்டேட்டு காணப்படுகிறது. [2] மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆல்கைலேட்டிங் முகவர் என்பதால் உள்ளிழுக்கப்படும் பட்சத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

பயன்கள்

[தொகு]

கலவரக் கட்டுப்பாட்டு முகவராக எத்தில் புரோமோ அசிட்டேட்டை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. 1912 ஆம் ஆண்டில் பிரெஞ்சு காவல்துறையினர் எத்தில் புரோமோ அசிட்டேட்டை இந்த நோக்கத்திற்காக முதலில் பயன்படுத்தினர். [3] 1914 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் செருமானியர்களுக்கு எதிராக இந்த வாயு நிரப்பப்பட்ட 'கிரெனேட்சு லாக்ரிமோகென்சு [4] என்ற துப்பாக்கி குண்டுகளை பிரெஞ்சு இராணுவம் பயன்படுத்தியது. ஆனால் எத்தில் புரோமோ அசிட்டேட்டு குளோரினை விட இருமடங்கு நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் ஆயுதங்கள் பெரிதும் பயனற்றவையாக இருந்தன. [5] போரின் ஆரம்ப மாதங்களில், ஆங்கிலேயர்கள் கண்ணீர்ப்புகை முகவர்கள் மற்றும் கந்தக டை ஆக்சைடு உட்பட அதிக நச்சு வாயுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர். [6] செருமன் இராணுவம் 1915 ஆம் ஆண்டில் செருமன் குறியீடான வெயிசுக்ரூசு எனப்படும் வெண் சிலுவை திட்டத்தின் கீழ் மணமற்ற, நச்சு வாயு இரசாயன ஆயுதங்களாக இவற்றை எச்சரிக்கை முகவராகப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி இந்தத் தாக்குதல்களைப் பயன்படுத்தியது. [7] கரிமத் தொகுப்பு வினைகளில் எத்தில் புரோமோ அசிட்டேட்டு ஒரு பல்துறை ஆல்கைலேட்டிங் முகவராகப் பயன்படுகிறது. துத்தநாகத்துடன் வினைபுரிந்து ஒரு துத்தநாக ஈனோலேட்டை உருவாக்கும் இரிபார்மாட்சுகி வினை இதன் முக்கிய பயன்பாடாகும்.

இவ்வினையின் விளைவாக உருவாகும் BrZnCH2CO2Et கார்போனைல் சேர்மங்களுடன் சேர்ந்து ஒடுக்க வினைக்கு உட்பட்டு β-ஐதராக்சி-எசுத்தர்கள் கிடைக்கின்றன. எத்தில் புரோமோ அசிட்டேட்டு பல பிற வினையாக்கிகளைத் தயாரிப்பதற்கான தொடக்கப் புள்ளியாகும். எடுத்துக்காட்டாக, பென்சால்டிகைடு போன்ற கார்போனைல் சேர்மங்களிலிருந்து ஆல்பா, பீட்டா- நிறைவுறா எசுத்தர்களை தயாரிப்பதற்கு தொடர்புடைய விட்டிக் வினையாக்கி பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. :[8] முப்பீனைல் பாசுபீனுடன் எத்தில் புரோமோ அசிட்டேட்டு வினைபுரிவதால் இவ்விட்டிக் வினையாக்கி பெறப்படுகிறது.

விட்டிக் வினையில் தொடக்கப் புள்ளியாக எத்தில் புரோமோ அசிட்டேட்டு
விட்டிக் வினையில் தொடக்கப் புள்ளியாக எத்தில் புரோமோ அசிட்டேட்டு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Natelson, S.; Gottfried, S. (1955). "Ethyl Bromoacetate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0381. ; Collective Volume, vol. 3, p. 381
  2. Criswell, DW; McClure, FL; Schaefer, R; Brower, KR (1980). "War gases as olfactory probes". Science 210 (4468): 425–6. doi:10.1126/science.6968976. பப்மெட்:6968976. Bibcode: 1980Sci...210..425C. 
  3. Public health response to biological and chemical weapons, Chapter 3, Biological and Chemical agents, WHO Guidance]
  4. "Plaidoyer pour la guerre des gaz". 15 April 2005.
  5. "Plaidoyer pour la guerre des gaz". 15 April 2005.
  6. "Poison Gas and World War One".
  7. Heller, Charles E. (September 1984). "Chemical Warfare in World War I: The American Experience, 1917-1918". Combat Studies Institute. Archived from the original on 2007-07-04. பார்க்கப்பட்ட நாள் 2007-08-02.
  8. A student lab procedure for the Wittig sequence shown, only using the related methyl ester.

புற இணைப்புகள்

[தொகு]