எத்திராஜ் அகிலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எத்திராஜ் அகிலன் என்பவர் தமிழ்நாட்டின், ஈரோட்டைச் சேர்ந்த ஒரு ஆங்கில பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளராவார்.

வாழ்க்கை[தொகு]

ஈரோட்டில் பிறந்தவரான எத்திராஜ் அகிலன், ஈரோடு நகரின் ஸ்ரீ வாசவி கல்லூரியில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலப் பேராசிரியராகவும், இறுதி இரண்டாண்டுகள் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றவர். பணி நிறைவுக்குப் பிறகு, இவர் மொழிபெயர்ப்புத் துறையில் பங்களித்து வருகிறார். இவருடைய மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் காலச்சுவடு, உன்னதம், அடவி, மணல் வீடு, கல்குதிரை, தமிழ் வெளி போன்ற இலக்கியப் பத்திரிகைகளிலும், கபாடபுரம், மலைகள் போன்ற இணைய சஞ்சிகைகளிலும் வெளியாகி இருக்கின்றன.

எழுத்துப் பணிகள்[தொகு]

  • ஆக்டேவியா பாஸின் 'நீலப் பூச்செண்டு' எனும் சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பானது லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் (மீட்சி புக்ஸ் வெளியீடு) என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • ஜெர்மன் கவிஞர் குந்தர் கூனர்ட், மற்றும் சிரியா நாட்டுக் கவிஞர் அடநிஸ் ஆகியோரின் கவிதை மொழிபெயர்ப்புகள் 'உலகக் கவிதை' எனும் தொகுப்பில், (மீட்சி புக்ஸ் வெளியீடு) இடம்பெற்றுள்ளது.
  • துருக்கி புதின எழுத்தாளர் அஹ்மட் ஹம்டி தன்பினாரின் புதினத்தை (Time Regulation Institute) 'நேர நெறிமுறை நிலையம்' எனும் தலைப்பில் தமிழுக்கு மொழிமாற்றம் செய்திருக்கிறார்.[1] (காலச்சுவடு வெளியீடு) 2015
  • ஐஸ்லாந்து நாட்டுப் புதின எழுத்தாளரான ஹால்டார் லேக்ஸ்நஸின் புதினத்தை (The Fish Can Sing) 'மீனும் பண் பாடும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.[2] (காலச்சுவடு வெளியீடு) 2017
  • சீன எழுத்தாளர் மா ஜியானின் சிறுகதைத் தொகுப்பை (Stick Out Your Tongue) 'நாக்கை நீட்டு' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார் (அடையாளம் பதிப்பகம் வெளியீடு)
  • துருக்கி புதின எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் நாவலை (The Black Book) 'கருப்புப் புத்தகம்' எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
  • செக் நாட்டுப் புதின எழுத்தாளர் மைக்கேல் அய்வாஸின் 'The Other City' எனும் நாவலை 'மற்ற நகரம்' எனும் தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
  • ஸ்லோவீனிய மொழிப் படைப்பாளர் ஆந்த்ரே ப்லாட்னிக்கின் 'Change Me' எனும் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை, 'என்னை மாற்று' எனும் தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நேர நெறிமுறை நிலையம்". கூகுல் புக்ஸ். பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மீனும் பண் பாடும்". கூகுல் புக்ஸ். பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

3. நாக்கை நீட்டு http://marinabooks.com/detailed?id=6%205639&name=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20[தொடர்பிழந்த இணைப்பு]

4. https://www.sramakrishnan.com/?p=8492

5. http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/39725-2020-02-24-05-34-43

6. http://senthilkumarpc.blogspot.com/2016/05/blog-post.html

7. https://www.goodreads.com/book/show/26206752

8. http://vaalnilam.blogspot.com/2016/03/blog-post.html

9. https://www.vikatan.com/arts/literature/padipparai-naakkai-neettu

10.https://www.hindutamil.in/news/literature/158698-.html

11. https://www.hindutamil.in/news/literature/176938--9.html

12. https://books.kalachuvadu.com/catalogue/ennaimaatru_1304

"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்திராஜ்_அகிலன்&oldid=3894192" இலிருந்து மீள்விக்கப்பட்டது