எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்
Ethiopian Airlines
የኢትዮጵያ አየር መንገድ
IATA ICAO அழைப்புக் குறியீடு
ET ETH ETHIOPIAN
நிறுவல்21 திசம்பர் 1945; 77 ஆண்டுகள் முன்னர் (1945-12-21)
செயற்பாடு துவக்கம்ஏப்ரல் 8, 1946 (1946-04-08)
வான்சேவை மையங்கள்போலே பன்னாட்டு வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்ShebaMiles
வானூர்தி நிலைய ஓய்விடம்
 • Cloud Nine Lounge
 • ShebaMiles Lounge
வான்சேவைக் கூட்டமைப்புஇசுட்டார் அலையன்சு
வானூர்தி எண்ணிக்கை71
சேரிடங்கள்
 • 101 (பயணிகள்)
 • 23 (சரக்கு)
மகுட வாசகம்The New Spirit of Africa
தாய் நிறுவனம்எத்தியோப்பிய அரசு (100%)
தலைமையிடம்போலே பன்னாட்டு வானூர்தி நிலையம், அடிஸ் அபாபா, எத்தியோப்பியா
முக்கிய நபர்கள்
 • Addisu Legesse Chairman
 • Tewolde Gebremariam (CEO)
 • Kassim Geressu (CFO)
 • Gobena Mikael (த.வ.அ)
 • Mesfin Tassew (COO)
Revenue ETB 33.815 billion(FY 2012)
நிகர வருவாய் ETB 1.049 billion(FY 2012)
இலாபம் ETB 2.031 billion(FY 2012)[1][2]
சொத்து ETB 26.368 billion(FY 2012)
Total equity ETB  2.772 billion(FY 2012)
இணையத்தளம்www.ethiopianairlines.com
An Ethiopian Airlines Douglas DC-3 at Lalibela Airport in 1974.

எத்தியோபியன் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியா நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படும் விமானச் சேவையாகும். இது டிசம்பர் 21, 1945 இல் நிறுவப்பட்டது. ஏப்ரல் 8, 1946 முதல் தனது செயல்பாட்டினை துவங்கியது. ஆரம்பகாலத்தில் எதியோப்பியன் ஏர் லைன்ஸ் என்று இதன் பெயர் இருந்தது. 1965 ஆம் ஆண்டு ஒரு பங்கீட்டு நிறுவனமாக மாறியது. அப்போது இதன் பெயர் எத்தியோபியன் ஏர்லைன்ஸ் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்நிறுவனம் 1959 முதல் சர்வதேச வான்வழி போக்குவரத்து அமைப்பின் உறுப்பினராகவும், 1968 [3] முதல் ஆப்பிரிக்க ஏர்லைன்ஸ் அமைப்புகளின் (AFRAA) உறுப்பினராகவும், டிசம்பர் 2011 முதல் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராகவும் உள்ளது.

இதன் தலைமை[4] மையமாக அட்டிஸ் அடாபாவில் உள்ள ‘போல் சர்வதேச விமான நிலையம்’ உள்ளது. இங்கிருந்து தான் 82 பயணிகள் இலக்குகளுக்கு தனது விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. அதில் 19 உள்நாட்டு சேவைகளும், 23 சரக்கு சம்பந்தப்பட்ட சேவைகளும் அடங்கும். ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் அதிக இடங்களை இலக்குகளாக கொண்டுள்ள விமான நிறுவனம் இதுவாகும். வளர்ந்துவரும் விமானச்சேவை[5][6] நிறுவனங்களில் இதுவும் ஒன்று, அத்துடன் ஆப்பிரிக்க கண்டத்தில் [7] விமானச்சேவையினை செயல்படுத்தும் நிறுவனங்களில் இந்நிறுவனம் மிகவும் பெரியது. துணை-சஹாரன் [8] பகுதிகளில் சிறிய அளவில் இலாபம் ஈட்டக்கூடிய விமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் கார்கோ பிரிவு “ஆப்பிரிக்கன் கார்கோ ஏர்லைன் ஆஃப் த இயர்” விருதினை 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெற்றுள்ளது.[9]

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்[தொகு]

An Ethiopian Airlines Boeing 720B on short final to London Heathrow Airport in 1982.
An Ethiopian Airlines Boeing 787 Dreamliner at Frankfurt Airport
An Ethiopian Airlines Fokker 50 at Bole International Airport in 2010.

ஜூன் 2014 ன் படி எதியோபியன் ஏர்லைன் பின்வரும் விமான நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

 • ஏர் சீனா[10]
 • ஏர் இந்தியா
 • அனைத்து நிப்பான் ஏர்வேய்ஸ்
 • ஏசியானா ஏர்லைன்ஸ்[11]
 • ஆஸ்கை ஏர்லைன்ஸ்
 • ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ்
 • ப்ருசெல்ஸ் ஏர்லைன்ஸ் [12]
 • எகிப்துஏர்
 • குவைத் ஏர்வேய்ஸ்
 • லாம் மொஸம்பிக் ஏர்லைன்ஸ்
 • லுஃப்தான்ஸா
 • ஓமன் ஏர்
 • ர்வான்டையர்
 • ஸாஸ்
 • சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ்
 • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
 • சவுத் ஆப்பிரிக்கன் ஏர்வேய்ஸ்
 • டர்கிஷ் ஏர்லைன்ஸ்
 • யுனைடெட் ஏர்லைன்ஸ்

தற்போதைய விமானக் குழு[தொகு]

நவம்பர் 2014 ன் படி, எதியோபியன் ஏர்லைன்ஸின் விமானக் குழுக்கள் பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளன.

An Ethiopian Airlines Boeing 767-200ER on short final to Dubai International Airport in 2006.
 • ஏர்பஸ் A350-900
 • போயிங் 737-400
 • போயிங் 737–700
 • போயிங் 737–800
 • போயிங் 737 MAX 8
 • போயிங் 757–200
 • போயிங் 767-300ER
 • போயிங் 777-200LR
 • போயிங் 777-300ER
 • போயிங் 787–8
 • பாம்பார்டியர் டேஷ் 8 Q400

கார்கோ விமான குழு[தொகு]

 • போயிங் 757-200PCF
 • போயிங் 777F
 • மெக்டொனல் டக்ளஸ் MD-11F

முந்தைய விமான குழுவில் இருந்த விமான ரகங்கள்[தொகு]

 • பெல் 47
 • ஏர்பஸ் A330-200
 • ஏர்பஸ் A340-300
 • ATR-42-300
 • ஆன்டனோவ் An-12BP
 • பீச் 18
 • போயிங் 707-320C
 • போயிங் 720B
 • போயிங் 727-200
 • போயிங் 737-200
 • போயிங் 747-200F
 • போயிங் 747-300
 • போயிங் 767-200ER
 • செஸ்னா 180
 • கான்வாயர் CV-240
 • டௌக்ளஸ் DC-6A
 • டௌக்ளஸ் DC-6B
 • டௌக்ளஸ் C-47
 • டௌக்ளஸ் C-47A
 • டௌக்ளஸ் C-47B
 • டௌக்ளஸ் DC-3D
 • டௌக்ளஸ் C-53
 • லாக்ஹீட் L-749 கான்ஸ்டெல்லேஷன்
 • DHC-5A பஃபெல்லோ
 • DHC-7-100
 • ஃபோக்கர் 50
 • லாக்ஹீட் L-100-30
 • மெக்டொனல் டௌக்ளஸ் MD-11P
 • பைபர் PA-18 சூப்பர் கப்
 • டுவின் ஓட்டர்

சேவைகள்[தொகு]

க்ளவுட் நைன் மற்றும் பொருளாதார வகுப்புகள் ஆகிய இரு பிரிவுகளும் பெரும்பாலான எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் இருக்கும் சேவைப்பிரிவுகள் ஆகும். அந்தந்த பிரிவுகளுக்குத் தகுந்தாற்போல் பொழுதுபோக்கு அம்சங்களும் உணவுப் பொருட்களும் பயணிகளுக்கு வழங்கப்படும்.

விருதுகள்[தொகு]

எத்தியோபியன் ஏர்லைன்ஸ் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க சில விருதுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

 • டொரொன்டோவின் பிளானெட் ஆப்பிரிக்க நெட்வொர்க் வழங்கிய “டிரான்ஸ்ஃபார்மேஷன் விருது - 2012” – ஜூலை 17, 2012.
 • பாம்பார்டியர் ஏரோஸ்பேஸ் வழங்கிய “ஏர்லைன் ரிலையபிலிட்டி பெர்ஃபார்மன்ஸ் விருது” - ஏப்ரல் 30, 2012
 • கென்யாவில் உள்ள நாயரோபியில் நடைபெற்ற மாநாட்டில் “ஆப்பிரிக்கன் கார்கோ ஏர்லைன் ஆஃப் த இயர் விருது – 2011” வழங்கப்பட்டது – பிப்ரவரி 24, 2011

சம்பவங்களும் விபத்துகளும்[தொகு]

வான்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையின்படி 1965 முதல் எதியோபியன் ஏர்லைன்ஸ் சுமார் 60 விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் இந்நிறுவனத்தின் பழைய பெயரில் ஆறு விபத்துக்களும் பதிவாகியுள்ளன. ஜனவரி 2013 ன் படி, சுமார் 337 பயணிகள் இந்நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவன விமானங்களை பயணிகளுடன் கடத்தியுள்ளதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதில் ஒரு விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்தானது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து 1996 ஆம் ஆண்டு எரிபொருள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால் ஏற்பட்டது.

இந்நிறுவனத்தின் இரண்டாம் பெரிய விபத்து 2010 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதில் விமானம் பியுரெட்-ராஃபிக் ஹரிரி என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மெடிட்டெரனியன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 90 மக்கள் இறந்தனர். 1988 ஆம் ஆண்டில் போயிங்க் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளானது இந்நிறுவனத்தின் மூன்றாவது பெரிய விபத்தாகும், இதில் 35 மக்கள் இறந்தனர். மற்றபடி ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் எதியோபியன் ஏர்லைன்ஸ் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அமைப்பினைக் கொண்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

 1. Tadesse, Kirubel (31 August 2013). "Ethiopian Airlines: Dreamliner Boosted Profits". Associated Press இம் மூலத்தில் இருந்து 13 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130913032207/http://abcnews.go.com/International/wireStory/ethiopian-airlines-dreamliner-boosted-profits-20125418. பார்த்த நாள்: 8 September 2013. 
 2. "Ethiopian Airlines CEO Credits Dreamliner Planes For Profits". Ventures Africa. 4 September 2013 இம் மூலத்தில் இருந்து 28 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140628165527/http://www.ventures-africa.com/2013/09/ethiopian-airlines-ceo-credits-dreamliner-planes-profits/. 
 3. "AFRAA Current Members – Ethiopian Airlines". African Airlines Association. 15 May 2012. http://www.afraa.org/index.php/membership/current-members/item/70. பார்த்த நாள்: 3 August 2011. 
 4. "Profile on Ethiopian Airlines". Centre for Aviation. Archived from the original on 8 October 2012. http://centreforaviation.com/profiles/airlines/ethiopian-airlines-et. பார்த்த நாள்: 29 December 2012. 
 5. "Ethiopian Airlines – Bringing the Dreamliner to Africa". CNN. 3 September 2012. 21 September 2012. http://edition.cnn.com/2012/09/03/world/africa/ethiopian-airlines-ceo/index.html. 
 6. "Ethiopian Airlines distinguished with African Cargo Airline Award". Sudan Tribune. 1 March 2011.Archived from the original on 10 May 2012. http://www.webcitation.org/67YXKlRBW. பார்த்த நாள்: 10 May 2012. 
 7. "Ethiopian Airlines aims to become the largest carrier in Africa by 2025". Centre for Aviation. 4 November 2011.Archived from the original on 17 July 2012. http://centreforaviation.com/analysis/ethiopian-airlines-aims-to-become-the-largest-carrier-in-africa-by-2025-62041. 
 8. "Ethiopian Airlines Named "Africa’s Most Profitable Airlines" for the Third Time in a Row" (Press release)". Ethiopian Airlines21 July 2011. Archived from the original on 10 May 2012. Retrieved 10 May2012. http://www.ethiopianairlines.com/en/news/prarchive.aspx?id=255. 
 9. "Ethiopian Cargo Wins "AFRICAN CARGO AIRLINE OF THE YEAR" Award" (Press release)". Ethiopian Airlines.25 February 2011. Archived from the original on 10 May 2012. Retrieved 10 May 2012. http://www.ethiopianairlines.com/en/news/prarchive.aspx?id=219. 
 10. "Ethiopian Airlines". Cleartrip.com. http://www.cleartrip.com/flight-booking/ethiopian-air-airlines.html. 
 11. Clark, Oliver (4 June 2014). "Ethiopian and Austrian sign codeshare". Flightglobal (London). http://www.flightglobal.com/news/articles/ethiopian-and-austrian-sign-codeshare-400063/. பார்த்த நாள்: 28 July 2014. 
 12. "Ethiopian and Brussels Set to Launch Codeshare Agreement"(Press release)". Ethiopian Airlines.12 June 2008. Archived from the original on 10 May 2012. http://www.webcitation.org/67YXVn3P7.