உள்ளடக்கத்துக்குச் செல்

எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தியோப்பியன் ஏர்லைன்சு விமானம் 302
Ethiopian Airlines Flight 302
விபத்து சுருக்கம்
நாள்10 மார்ச் 2019 (2019-03-10)
சுருக்கம்புறப்பட்ட சிலபொழுதில் வீழ்ந்தது; விசாரணையில் உள்ளது
இடம்பிசோப்து, எத்தியோப்பியா
பயணிகள்149
ஊழியர்8
உயிரிழப்புகள்157
தப்பியவர்கள்0
வானூர்தி வகைபோயிங் 737 மாக்சு 8
இயக்கம்எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்
வானூர்தி பதிவுET-AVJ
பறப்பு புறப்பாடுஅடிசு அபாபா போலே பன்னாட்டு வானூர்தி நிலையம், அடிஸ் அபாபா
சேருமிடம்யோமோ கென்யாட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம், நைரோபி, கென்யா

எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302 (Ethiopian Airlines Flight 302) என்பது 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் நடந்த வான் விபத்து ஆகும். எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 302 (போயிங் - 737 இரக விமானம்) எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 149 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களுமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர்.[1][2] இந்த விமானம் காலை 8.38 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட 6 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. பிசாப்டூ என்ற நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பியா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[3] இந்த விபத்தில் கென்ய நாட்டைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 9 பேர், பிரான்சு, இங்கிலாந்தைச் சேர்ந்த தலா 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர், நெதர்லாந்தைச் சேர்ந்த 5 பேர், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'எத்தியோப்பியா விமான விபத்து; 149 பயணிகளின் நிலை?'- புறப்பட்ட 6-வது நிமிடத்தில் நடந்த சோகம்". விகடன். 10 மார்ச் 2019. Retrieved 10 மார்ச் 2019.
  2. 2.0 2.1 "எத்தியோப்பியா விமான விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி". இந்து தமிழ் திசை. 10 மார்ச் 2019. Retrieved 10 மார்ச் 2019.
  3. "எத்தியோப்பியாவில் விமான விபத்து 157 பேர் பலி". புதிய தலைமுறை. 10 மார்ச் 2019. Retrieved 10 மார்ச் 2019.