எதெல் பெல்லாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எதெல் பெல்லாமி
Ethel Bellamy
பிறப்புஎதெல் பிரான்சிசு பட்வெல் பெல்லாமி
17 நவம்பர் 1881
இறப்பு7 திசம்பர் 1960
தேசியம்பிரித்தானியர்
பணிமாந்தக் கணினி
நிலநடுக்கவியலாளர்

எதெல் பிரான்சிசு பட்வெல் பெல்லாமி (Ethel Frances Butwell Bellamy) (17 நவம்பர் 1881 – 7 திசம்பர் 1960) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் மாந்தக் கணினியும் நிலநடுக்கவியலாலரும் ஆவார். இவர் மில்லியன் விண்மீன்களுக்கும் மேலான விண்மீன்களின் இருப்புகளை வானியல் அட்டவணையில் சேர்க்க உதவியவர் ஆவார்..[1]

வாழ்க்கை[தொகு]

இவர் 1881 நவம்பர் 17 இல் மாண்டகு எட்வார்டு ஜேம்சு புட்வெல் பெல்லாமிக்கும் (1850–1908) காசுதெல் எனப்பட்ட மேரி பெல்லாமிக்கும் பிறந்தார். இவரது மாமா பிராங்க் ஆர்த்தர் பெல்லாமிஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் இராடுகிளிப் வான்காணகத்தி இரண்டு உதவியாளரில் மூத்தவர் ஆவார்; எதெல் 1899 இல் தன் 17 ஆம் அகவையில், அவருக்காக வீட்டில் இருந்தே பகுதிநேர உதவியாளராகப் பணிபுரிய தொடங்கினார். இவர் கார்தே து சியல் (Carte du Ciel), வான்வரை அட்டவணை (Astrographic Catalogue) ஆகிய திட்டங்களுக்கான ஆக்சுபோர்டு பங்களிப்புகள் சார்ந்த கணக்கீடுகளைச் செய்தார். இவருக்குசாவிலியன் வானியல் பேராசிரியர் எர்பெர்ட் கால் டரனர் வழிகாட்டினார்.[1][2] டர்னர் 1912 இல் இவரை அந்த வான்காணகத்துக்கான நிலையான முழுநேர இரண்டாம் உதவியாளராகப் பணியில் அமர்த்தினார். இவருக்கு ஆண்டுக்கு 50 பவுண்டுகள் ஊதியம் வழங்கப்பட்டது.[1][3] இப்பணி முன்பு இவரது மாமாவில் ஒருவராகிய பிரெடெரிக் பெல்லாமியால் செய்யப்பட்டதாகும். அவர் எதெல் பிறப்பதற்கு முன்பே இரந்துவிட்டார்.[4]

ஆக்சுபோர்டு வான்வரை அட்டவணையில் பணி முடிந்ததும், டர்னர் கணக்கீடுகளுக்கான தேவைமிக்க வாட்டிகான் வான்காணகத்துக்கு உதவ முடிவுசெய்தார்.[2] From 1911 to 1928, Bellamy performed the reductions on the measurements and prepared the results for publication;[1] வாட்டிகான் வட்டாரத்துக்கான முழுப்பணியும் எதெல்லிட விடப்பட்டது.[3] இவரது பணியில் நிறைவுற்ர வாட்டிகான் இவருக்கு 1928 இல் தன் வெள்ளிப் பதக்கத்தை வழங்கியது; என்றாலும், இப்பணிக்காக இவருக்கு ஊதியம் ஏதும் தரப்படவில்லை. 1928 அளவில் இவரும் இவரது மாமாவும் ஒரு மில்லியன் விண்மீன்களுக்கும் மேலான விண்மீன்களின் இருப்புகளை அட்டவணைப்படுத்தினர்.[1]

இவர் 1918 இல் அந்த வான்காணகத்தில் நிலநடுக்கவியல் உதவியாளர் ஆனார். இவர் 600 நிலநடுக்க நிலையங்களின் நிலநடுக்கப்படங்களைக் கையாண்டார். அவற்றின் தரவுகளை பகுப்பாய்வுக்கு உகந்தபடி தொகுத்தார். டர்னருக்குப் பின் 1923 இல் இருந்து ஜோசப் அகுசு புதிய உதவியாளராகப் பணியேற்று நிலநடுக்க குவிமையங்களை கணக்கிட்டார். இவர் பன்னாட்டு நிலநடுக்கவியல் தொகுப்பமைப்புக்கான வெளியீட்டுத் தரவுகளை ஆயத்தப்படுத்தினார்.[3] மேலும் அகுசு படையில் சேர்ந்த போது, பெல்லாமி இரண்டாம் உலகப் போருக்கான நிலநடுக்கவியல் குவிமையங்களைக் கணக்கிட்டார்.[5] இப்பதவியில் இவர் சூடேற்றப்படாத குடிலில் 1927 வரை பணிபுரிந்தார். இதனால், இவர் மிகவும் தொல்லை பட்டதோடு, இவரது உடல்நலமும் குன்றலானது. டர்னர் இறந்த 1930 இல், பெல்லாமி ISS இன் பதிப்பாசிரியர் ஆனார்;[1] இவர் தன் சொந்த ஆர்வத்தால் 1925 முதல் 1935 வரையிலான நிலநடுக்க புறமையங்களின் தகவல்களைத் திரட்டியுள்ளார். மேலும் இவற்ரின் இருப்புகளையும் உலகப்பட்த்தில் குறித்துள்ளார். இவர் 1913 முதல் 1939 வரையிலான கால இடைவெளியில் பத்து ஆய்வுரைகலை வெளியிட்டார். இவற்ரில் இரண்டை தன் மாமாவுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். இவரது மாமா 1936 இல் இறந்தார். இவரது மாமா இவருடன் நெடுங்காலத்துக்கு இணைந்து பணிபுரிந்தும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகதுக்கு மதிப்புமிக்க தகவல்களைத் திரட்டித் தந்துவிட்டு சென்றதுபோல இவருக்காக செல்வம் ஏதுமே விட்டு செல்லவில்லை. இவரது மாமாவின் உடைமைகளை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் ஏற்காததால் அவற்றை விற்ர நிதி இவருக்குக் கிடைத்தது.[1]

பெல்லாமி பிரித்தானிய வானியல் கழகத்தின் உறுப்பினராவார். இவர் 1926 இல் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏலும், இவருக்கு ஆக்சுபோர்டு பலகலைக்கழகம் கலை முதுவர் பட்டத்தை வழங்கியது. இவர் 1947 ஜூலையில் ஓய்வு பெற்று தோர்சேத்தில் உள்ள உப்வேவுக்கு இடம் மாறினார். இவர் 1960 திசம்பர் 7 இல் தோர்சேத்தில் உள்ள வேமவுத்தில் இறந்தார்ர்.[1][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதெல்_பெல்லாமி&oldid=2749449" இருந்து மீள்விக்கப்பட்டது