உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்ப்பு முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய எதிர்ப்பு முன்னணி
இலச்சினை
நிறுவனர்முகமது அப்பாஸ் சேக்[1]
சேக் சஜ்ஜத் குல்[2]
செயல்பாட்டுக் காலம்2019–தற்போது வரை
மூல அமைப்புலஷ்கர்-ஏ-தொய்பா
ஹிஸ்புல் முஜாகிதீன்
நோக்கங்கள்ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சிகளை தூண்டுதல்[3][4][5][6]
செயல்பாட்டுப் பகுதி(கள்)ஜம்மு காஷ்மீர்
குறிப்பிடத்தக்க தாக்குதல்கள்
தீவிரவாத அமைப்பாக அறிவித்தது
இந்தியா
கூட்டாளிகள்மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி
அல்-பதர்[3]
எதிரிகள் இந்தியா
யுத்தங்கள் மற்றும் போர்கள்ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி[11]

இந்திய எதிர்ப்பு முன்னணி (The Resistance Front (சுருக்கமாக:TRF), இந்தியாவிற்கு எதிராக, குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மற்றும் இந்துக்கள் மீது தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபடும் ஒரு தீவிரவாத அமைப்பாகும். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவின் ஒரு பிரிவே இந்திய எதிர்ப்பு முன்னணி ஆகும். இந்த அமைப்பை இந்திய அரசு தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு க அறிவித்துள்ளது.[12][13] இந்தக் குழு சமயச் சிறுபான்மை மக்களான காஷ்மீர் இந்துக்கள் உள்ளிட்ட பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் இந்திய இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பாகும்.[14][15][16][17] மேலும் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் இந்தியாவின் வெளி மாநில தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகம் & தொழிலதிபர்கள், உள்ளூர் அரசியல்வாதிகளைத் தாக்கி கொல்வதே இக்குழுவினரின் நோக்கமாகும்.[16][18][19][20]

பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பே எதிர்ப்பு முன்னணி (The Resistance Front (TRF) ஆகும்.[21][22]2019-இல் ஜம்மு காஷ்மீரின் சிறப்புரிமையை நீக்கியதை எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளைக் கொண்டு 2019 ஆம் ஆண்டில் எதிர்ப்பு முன்னணி நிறுவப்பட்டது.[14][23] எதிர்ப்பு முன்னணியானது ஜம்மு காஷ்மீரில் மட்டும் தாக்குதல்கள் நடததுவதற்கு பயிற்சி பெற்ற ஒரு தீவிரவாத அமைப்பாகும். மத அடையாளம் கொள்ளாத இவ்வமைப்பு,[24] ஜம்மு காஷ்மீரில் சமயச் சிறுபான்மை மக்களை குறி வைத்துக் கொல்வதே நோக்கமாகக் கொண்டுள்ளது..[25] இந்தக் குழு சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க இருப்பைப் பேணுகிறது, அவற்றில் சில இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானுடன் தொடர்புடையவை.[26]

எதிர்ப்பு முன்னணி அமைப்பினரின் இந்துக்கள் மீதான தாக்குதல்கள்

[தொகு]

2024 ரியாசி தீவிரவாதிகளின் தாக்குதல்

[தொகு]

'9 சூன் 2024 அன்று இந்தியாவின் சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள சிவகோரி குகைக்கோயிலில் சிவபெருமானை வழிப்பட்ட இந்துக்கள் கட்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்டின் (The Resistance Front) தீவிரவாதிகள் பேருந்தை நிறுத்தி இந்து பக்தர்களை எம்4 துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். இந்தத் தாக்குதலில் 9 இந்து பக்தர்கள் இறந்தனர். மேலும் 41 இந்து பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.[27][28] இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்பு முன்னணி எனும் தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் பொறுப்பு ஏற்றது.[29]

2025 பகல்காம் தாக்குதல்

[தொகு]

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பகல்காம் நகரம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கை காண வந்த சுற்றுலாப் பயணிகளில், 28 இந்து ஆண்களை குறிவைத்து இத்தீவிரவாத அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு எதிர்ப்பு முன்னணி எதிர்ப்பு எனும் தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் தீவிரவாத அமைப்பு உடனடியாகப் பொறுப்பேற்றது.[30]

தடை

[தொகு]

இந்திய அரசு இந்த அமைப்பை ஏற்கனவே தடை செய்திருந்த நிலையில், 17 சூலை 2025 அன்று ஐக்கிய அமெரிக்கா, 2025 பகல்காம் தாக்குதலுக்கு காரணமான எதிர்ப்பு முன்னணி அமைப்பை உலகளாவிய தீவிரவாத அமைப்பாக அறிவித்தது.[31][32][33]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Who was Abbas Sheikh, TRF chief who revived militancy in Srinagar?". The Week.
  2. "LeT commander Sajjad Gul designated as terrorist". Press Trust of India. 20 April 2022. Archived from the original on 5 August 2024. Retrieved 5 August 2024.
  3. 1 2 Gupta, Shishir (2020-05-08). "Pak launches terror's new face in Kashmir, Imran Khan follows up on Twitter". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 5 November 2021. Retrieved 2020-05-11.
  4. "'Pakistan trying to securalise Kashmir militancy': Lashkar regroups in Valley as The Resistance Front". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-05. Archived from the original on 6 April 2023. Retrieved 2020-05-11.
  5. Gupta, Shishir (2020-05-08). "New J&K terror outfit run by LeT brass: Intel". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 14 December 2023. Retrieved 2020-05-11.
  6. Pubby, Manu; Chaudhury, Dipanjan Roy (2020-04-29). "The Resistance Front: New name of terror groups in Kashmir". The Economic Times இம் மூலத்தில் இருந்து 5 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230405215811/https://economictimes.indiatimes.com/news/defence/the-resistance-front-new-name-of-terror-groups-in-kashmir/articleshow/75440416.cms.
  7. India Today பரணிடப்பட்டது 10 அக்டோபர் 2023 at the வந்தவழி இயந்திரம், 6 April 2020
  8. Kashmir: 5 security forces and 2 rebels killed in a gun battle பரணிடப்பட்டது 10 அக்டோபர் 2023 at the வந்தவழி இயந்திரம், Al Jazeera, 3 May 2020
  9. Jammu and Kashmir: Municipal Councillor and Policeman Killed in Sopore, The Wire, Insert_the_date_you_accessed_the_source
  10. Four Militants, OGWs Held for 2 June IED Blast in Shopian, Kashmir Pulse, 7 June 2022
  11. "What is The Resistance Front, the militant group linked to Pahalgam attack?". Reuters. 2025-04-24. https://www.reuters.com/world/india/kashmir-resistance-group-that-claimed-attack-tourists-indian-kashmir-2025-04-23.
  12. Joy, Shemin (6 January 2023). "Centre bans LeT's proxy outfit 'The Resistance Front'". Deccan Herald. https://www.deccanherald.com/india/centre-bans-lets-proxy-outfit-the-resistance-front-1178338.html.
  13. Saifi, Rhea Mogul, Sophia (2025-04-24). "A tourist massacre in Kashmir is escalating tensions between India and Pakistan. Here's what we know". CNN (in ஆங்கிலம்). Retrieved 2025-05-01.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  14. 1 2 "Positioning The Resistance Front (TRF) in Kashmir's militancy landscape". Observer Research Foundation. 15 December 2021. Archived from the original on 19 May 2024. Retrieved 19 May 2024.
  15. Basak, Saptarshi (11 October 2021). "The Resistance Front: The Invisible, LeT-Backed Outfit Terrorising Kashmir". The Quint. Archived from the original on 13 June 2024. Retrieved 19 May 2024.
  16. 1 2 Shukla, Tejusvi (4 August 2020), "Secularization of Militancy in Kashmir: Myth or Reality?", MP-IDSA
  17. Majid, Zulfikar (22 April 2024). "Govt employee shot dead by terrorists in J&K's Rajouri". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 19 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240519160055/https://www.deccanherald.com/india/jammu-and-kashmir/man-shot-dead-by-terrorists-in-jks-rajouri-2989556.
  18. Gupta, Manoj (19 May 2024). "Lashkar-Backed TRF Behind 2 Terror Attacks In Kashmir Ahead Of Monday's Polls: Intel Sources". News 18 இம் மூலத்தில் இருந்து 19 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240519055435/https://www.news18.com/amp/india/let-backed-trf-behind-2-terror-attacks-in-jk-ahead-of-mondays-polls-intel-sources-exclusive-8895971.html.
  19. Masood, Bashaarat (5 May 2020), "'Pakistan trying to securalise Kashmir militancy': Lashkar regroups in Valley as The Resistance Front?", இந்தியன் எக்சுபிரசு, archived from the original on 6 April 2023, retrieved 17 September 2023
  20. "Lashkar-Backed TRF Behind 2 Terror Attacks In Kashmir Ahead Of Monday's Polls: Intel Sources". India TV News. 19 February 2021. https://www.indiatvnews.com/news/india/jammu-and-kashmir-terrorists-open-fire-police-party-srinagar-baghat-barzulla-2-jawans-killed-685932.
  21. "The Resistance Front (TRF) - Jammu & Kashmir". Terrorism Research & Analysis Consortium (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-04-27. In 2020, it is believed that Lashkar-e-Taiba (LeT) established The Resistance Front (TRF) as a proxy organization. The group was one of five organizations to appear in Jammu and Kashmir that year ...
  22. "The Resistance Front (TRF) Terrorist Group, Jammu & Kashmir". South Asia Terrorism Portal. Retrieved 2025-05-11.
  23. Mir, Shakir (26 June 2021). "Why Militants Are Turning to Srinagar – Again". The Wire. Archived from the original on 17 September 2023. Retrieved 16 September 2023.
  24. Raseed, Adil (4 August 2020), "The August 5 Anniversary: J&K on Home Straight", MP-IDSA, archived from the original on 19 May 2024, retrieved 19 May 2024
  25. "India: Gunmen Target Minorities in Jammu and Kashmir | Human Rights Watch" (in ஆங்கிலம்). 2021-10-08. Retrieved 2025-05-07.
  26. Gupta, Shishir (8 May 2020), "New J&K terror outfit run by LeT brass: Intel", ஹிந்துஸ்தான் டைம்ஸ், archived from the original on 14 December 2023, retrieved 17 September 2023
  27. Reasi terror attack: NIA searches underway in two districts of J&K
  28. "Jammu and Kashmir: 10 Hindu pilgrims killed in bus attack in Reasi". www.bbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2024-06-10. Retrieved 2025-04-29.
  29. The Resistance Front: The banned organisation behind Pahalgam terror attack
  30. What is The Resistance Front, the group claiming the deadly Kashmir attack?
  31. U.S. designates LeT proxy behind Pahalgam attack as Foreign Terrorist Organisation and Specially Designated Global Terrorist
  32. US designates The Resistance Front as terrorist organization
  33. US labels the group accused of Pahalgam attack a ‘terrorist’ organization
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்ப்பு_முன்னணி&oldid=4589197" இலிருந்து மீள்விக்கப்பட்டது