உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்காலவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூரின் விதி என்பது எதிர்காலவியலுக்கான எடுத்துக்காட்டு. இவ்விதி கடந்த கால மற்றும் நிகழ்காலப் போக்கின் தரவுகளைக் கருத்தில் கொண்டு புள்ளியியல் முறைப்படி எதிர்காலத்தின் போக்கினைத் துல்லியமாகக் கணிப்பதை இலட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது.

வரலாறு, தற்கால மாற்றங்களின் போக்குக்கள், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி நிலைகள் போன்ற பல அம்சங்களின் துணையுடன் எதிர்காலத்தை நோக்கி பகுப்பாய்வது, வரவுதுரைப்பது எதிர்காலவியல் (Future Studies) ஆகும். முன்னறிவிப்பு போன்ற முன்கணிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவதும் ஒரு நுட்பமாகும். ஆனால், சமகால எதிர்கால ஆய்வறிஞர்கள் மாற்று வழிகளை முறையாக ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.[1][2][3] பொதுவாக, இதை சமூக அறிவியலின் ஒரு பிரிவாகவும், வரலாற்றுத் துறையின் நீட்டிப்பாகவும் கருதலாம். எதிர்காலத்தைப் பற்றிய ஆய்வுகள், எவையெல்லாம் எதிர்காலத்தில் தொடர வாய்ப்புள்ளது, எவையெல்லாம் எதிர்காலத்தில் மாறக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள முயல்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. James Joseph O'Toole (2017). "Futurology | social science". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 11 May 2020.
  2. "Futurology | Definition of Futurology by Lexico". Lexico Dictionaries | English (in ஆங்கிலம்). Archived from the original on March 25, 2020. Retrieved 11 May 2020.
  3. Voros, Joseph (2017-02-24). "The Futures Cone, use and history". The Voroscope (in ஆங்கிலம்). Retrieved 2020-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்காலவியல்&oldid=4217903" இலிருந்து மீள்விக்கப்பட்டது