உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்காலம் (இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கணத்தில், எதிர்காலம் (future tense) என்பது தற்போது வரை நடைபெறாத, ஆனால் எதிர்காலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வினைச்சொல் வடிவமாகும். புகழினி நாளை கடிதம் எழுதுவாள் என்பதில் எழுதுவாள் என்பது இனிமேல் நடைபெறுவதைக் குறிக்கும் வினைச்சொல் வடிவமாகும்.

ஆங்கிலத்தில் எதிர்காலத்தை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு இலக்கண மற்றும் சொற்பொருள் வழிமுறைகள் இருந்தாலும், சொல் வடிவ மாற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. இதில் will, shall ஆகிய துணை வினைச்சொற்களும் அடங்கும்.[1]

வெளிப்பாடுகள்

[தொகு]

செயலைச் செய்பவர், தான் நடைபெறும் என எதிர்பார்க்கும் அல்லது தான் எதிர்காலத்தில் செய்ய நினைக்கும் செயல்களைக் கூறுவதற்கு இத்தகைய காலத்தினைப் பயன்படுத்துவர்.[2] எதிர்கால வெளிப்பாடு என்பது யதார்த்தமா அல்லது யதார்த்தமற்றதா என்பது ஒரு மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சிக் கருத்தைச் சார்ந்தது அல்ல, மாறாக நிகழ்வு உண்மையில் நடைபெறும் என்ற செயலைச் செய்பவரின் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தது.[3]:ப.20

இந்தோ-ஆரிய மொழிகள்

[தொகு]

தமிழ்

[தொகு]
நான் நான் நேசிப்பேன்.
நாம் நாம் நேசிப்போம்
நீ நீ நேசிப்பாய்
நீங்கள் நீங்கள் நேசிப்பீர்கள்
அவன்/அவள் அவன் நேசிப்பான்/ அவள் நேசிப்பாள்
அவர்கள்/அவைகள் அவர்கள் நேசிப்பார்கள்/அவைகள் நேசிப்பார்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Huddleston, Rodney; Pullum, Geoffrey (2002). The Cambridge Grammar of the English Language. Cambridge University Press. pp. 131–136, 190, 208–210. ISBN 9780521431460.
  2. Östen Dahl, Tense and Aspect Systems, Blackwell, 1985, pp. 105-106.
  3. Fleischman, Suzanne, The Future in Thought and Language, Cambridge Univ. Press, 1982: pp. 18-19, 86-89, and 95-97.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்காலம்_(இலக்கணம்)&oldid=4170675" இலிருந்து மீள்விக்கப்பட்டது