எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம் (Enemy Property Act, 1968) 1947இல் இந்தியப் பிரிவினையை அடுத்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டில் குடியேறிவர்களின் அனைத்து விதமான சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக, 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் இந்திய அரசால் எதிரி சொத்து சட்டம், 1968ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டப்படி பாகிஸ்தானில் குடியேறியவர்களின் சொத்துக்களைப் பராமரிக்க, இந்திய அரசு சில முகவர்களை பாதுகாவலர்களாக நியமித்தது.

சட்ட திருத்தம்[தொகு]

1968ஆம் ஆண்டின் எதிரி சொத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களுடன் 7 சனவரி 2016 அன்று இந்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. [1] [2]பின்னர் திருத்தப்பட்ட எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம், மார்ச் 8, 2016 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியது. இதன்படி பாகிஸ்தானுக்கு குடியேறிவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் சொத்துகளை விற்பனை செய்ய இயலாது. எதிரி சொத்துகளை இப்போதும் பராமரித்து வருபவர்கள் அது தனிநபராக இருந்தாலும் அல்லது அரசுத் துறையாக இருந்தாலும், அவர்களே அந்தச் சொத்துகளை வைத்துக் கொள்ள முடியும் என்பதே இச்சட்டத் திருத்த முன்வடிவத்தின் சிறப்பு அம்சமாகும். [3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.prsindia.org/uploads/media/Ordinances/enemy%20property%20ordinance%202015.pdf
  2. Enemy Property Ordinance, 2016 Promulgated
  3. LS passes Bill to amend Enemy Property Act
  4. எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் தாக்கல்

வெளி இணைப்புகள்[தொகு]