எண்பது நாட்களில் உலகைச் சுற்றி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எண்பது நாட்களில் உலகைச் சுற்றி
Around the World in Eighty Days
Verne Tour du Monde.jpg
நூலாசிரியர்ழூல் வேர்ண்
நாடுபிரான்சு
மொழிபிரெஞ்சு
வகைதுணிகரச் செயல் நாவல்
வெளியீட்டாளர்Pierre-Jules Hetzel

எண்பது நாட்களில் உலகைச் சுற்றி பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஒரு சாகச புதினமாகும். இது பிரெஞ்சு எழுத்தரான ஜுல்ஸ் வேர்ண் என்பவரால் எழுதப்பட்டது. 1873 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமானது. பிலியஸ் பாக் என்ற லண்டன் வாசியும் அவரது உதவியாளன் பாசெபார்டவுட் என்பவரும் ஒரு பந்தயம் காரணமாக எண்பது நாட்களில் உலகைச் சுற்றி வர முயற்சிப்பதே இக்கதையின் கருவாகும். 

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த கதை லண்டனில் அக்டோபர் 1, 1872-இல் தொடங்குகிறது. 

ரிபார்ம் கிளப் எனும் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பணக்காரர் பிலியஸ் பாக் உலகை எண்பது நாட்களில் சுற்றி வர முடியும் என சக உறுப்பினர்களுக்கு சவால் விடுகிறார். இதற்காக அவர் 20,000 பவுண்டுகள் பந்தயம் கட்டுகிறார். தனது உதவியாளன் பாசெபார்டவுட் உடன் அவர் அக்டோபர் 2 அன்று இரவு லண்டனில் இருந்து கிளம்புகிறார். அவர் பந்தயத்தை வெல்ல டிசம்பர் 21 அன்று ரிபார்ம் கிளப்புக்கு திரும்ப வேண்டும்.