எண்ணெய் மணல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பர்ட்டா, கனடாவில் உள்ள அதபசக்கா எண்ணெய் மணல்கள் - இங்கு அசுபால்ட்டு மிகுந்த அளவில் கிடைக்கின்றது; இதனை செயற்கை பாறை எண்ணெயாக மேம்படுத்தலாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து கரியெண்ணெய் மணற்பாறை

எண்ணெய் மணல்கள் (Oil sands), கரியெண்ணெய் மணல்கள் (tar sands), அல்லது தொழில்முறையாக, நிலக்கீல் மணல்கள் (bituminous sands) என்பன வழக்கத்திற்கு மாறான பாறைநெய் வைப்புக்களாகும்.

எண்ணெய் மணல்கள் உதிரி மணல்களாகவோ பகுதியும் கெட்டியான மணற்பாறையாகவோ இருக்கலாம்; இயற்கையான மணல், களிமண், நீர் கலவையுடன் மிகவும் பிசுக்குமை வாய்ந்த, கெட்டியான (தொழில்முறையாக அசுபால்ட்டு என்றும் சொல்வழக்கில் தார் என்றும் குறிப்பிடப்படும்) பாறை எண்ணெய் நிறைசெறிவாக கொண்டிருக்கும். இயற்கை நிலக்கீல் வைப்புக்கள் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன; குறிப்பாக கனடாவில் மிகுந்த அளவில் காணப்படுகின்றன.[1][2] மேலும் பெரும் வைப்புகள் கசக்ஸ்தான், உருசியாவில் கண்டறியப்பட்டுள்ளன. உலகளவில் எண்ணெய் வைப்பின் மதிப்பீடு 2 trillion barrels (320 பில்லியன் கன சதுர மீட்டர்கள்) கூடுதலாகும்;[3] இந்த மதிப்பீடுகளில் இன்னமும் கண்டறியப்படாத வைப்புக்களும் அடங்கும். உறுதி செய்யப்பட்ட நிலக்கீல் வைப்புக்கள் ஏறத்தாழ 100 பில்லியன் கொள்கலன்களாகவும்[4] மொத்த இயற்கை நிலக்கீல் வைப்புக்கள் 249.67 Gbbl (39.694×10^9 m3) ஆகவும் உலகளவில் மதிப்பிடப்படுகின்றது; இவற்றில் 176.8 Gbbl (28.11×10^9 m3), அல்லது 70.8%, கனடாவின் ஆல்பெர்ட்டாவில் உள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Pierre-René Bauquis (2006-02-16). "What the future for extra heavy oil and bitumen: the Orinoco case". World Energy Council இம் மூலத்தில் இருந்து 2007-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070402100135/http://www.worldenergy.org/wec-geis/publications/default/tech_papers/17th_congress/3_1_04.asp. பார்த்த நாள்: 2007-07-10. 
  2. (PDF) Alberta's Oil Sands: Opportunity, Balance. Government of Alberta. March 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7785-7348-7. http://www.environment.alberta.ca/documents/Oil_Sands_Opportunity_Balance.pdf. பார்த்த நாள்: 13 May 2008. 
  3. "About Tar Sands" இம் மூலத்தில் இருந்து 2014-09-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140904162646/http://ostseis.anl.gov/guide/tarsands/index.cfm. 
  4. "Bitumen and heavy crudes: The energy security problem solved?". Oil and Energy Trends 31 (6): 3–5. 2006. doi:10.1111/j.1744-7992.2006.310603.x. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெய்_மணல்&oldid=3545708" இருந்து மீள்விக்கப்பட்டது