எண்ணெய் குளிர்வூட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்ணெய் குளிர்வூட்டல் (oil cooling system) என்பது எண்ணெயை குளிர்விப்பானாக பயன்படுத்தி குளிர்வூட்டும் முறை ஆகும். இந்த எண்ணெய், பொருள்களின் அல்லது இயந்திரத்தின் வெப்பத்தை உறிஞ்சி பொருளை அல்லது இயந்திரத்தை குளிர்வூட்டுகிறது. எனவே இந்த எண்ணெய் வெப்பமாக மாறும் ஆதலால் இவை சுழற்சி முறையில் மீண்டும் எண்ணெயை குளிர்விப்பானுக்கு சென்று தன்னை குளிர்வடைய செய்துகொள்கிறது. இந்த எண்ணெய் குளிர்வூட்டல் அதிக வேகமாக செல்லும் விசையுந்து வண்டிகளின் இயந்திரத்தில் (motorcycle engines) பயன்படுத்தப்படுகிறது.

நன்மைகள்:[தொகு]

  • எண்ணெய் நீரை விட அதிக கொதிநிலை புள்ளிகளை உடையது, அதனால் அது 100 ° C க்கு மேல் வெப்பநிலையில் உள்ள பொருட்களை குளிர்விக்க பயன்படுத்த முடியும். ஏனெனில் நீரின் கொதிநிலை 100 ° C.
  • எண்ணெய் ஒரு மின் காப்பு பொருள், இதனால் மின் கூறுகளின் உள்ளே மற்றும் மின் கூறுகளுடன் நேரடி தொடர்பு உடைய இடங்களில் பயன்படுத்த முடியும்.
  • எண்ணெய் ஏற்கனவே, உயவுபொருளாக(lubricant) பயன்படுத்தப்படுகிறது, எனவே எண்ணெயை குளிர்வூட்டலுக்கும் பயன்படுத்தும் போது அது ஒரு இரட்டை பயன்பாடாக அமையும்.

தீமைகள்[தொகு]

  • சுமார் 200 ° C -300 ° C வெப்பநிலைக்கு கீழ் உடைய பொருட்களின் குளிர்ச்சியடையவைக்க மட்டுமே எண்ணெய் குளிர்வூட்டல் பயன்படுத்த முடியும்.
  • எண்ணெயில் பாகங்களை வைப்பதும் எடுப்பதும் கடினம்.
  • நீர் குளிர்விக்கும் முறையில், நீர் உலகளவில் எங்கும் கிடைக்கும் ஆனால் சில குறிப்பிட்ட எண்ணெய் பல இடங்களில் கிடைப்பது இல்லை.
  • தண்ணீரைப் போல் இல்லாமல், எண்ணெய் சில நேரங்களில் எரியக்கூடியவையாக இருக்கிறது.