எண்ணெய்ப் பனையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எண்ணெய்ப் பனையன்
Oligodon affinis sal.jpg
பெங்களூரில் ஒரு எண்ணெய்ப் பனையன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலுடைய ஊர்வன
துணைவரிசை: பாம்பு
குடும்பம்: Colubridae
பேரினம்: Oligodon
இனம்: O. arnensis
இருசொற் பெயரீடு
Oligodon arnensis
(Shaw, 1802)[1]
வேறு பெயர்கள்

Simotes arnensis

எண்ணெய்ப் பனையன் (Banded kukri snake) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு இனமாகும். இது இலங்கை, இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், பூட்டான், பர்மா, தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2]

Common kukri.jpg

விளக்கம்[தொகு]

இப்பாம்புகள் செந்நிறத்திலோ அல்லது சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலோ இருக்கும். பளபளப்பான செதில்களுடன், கூரற்ற தலை கொண்டு இருக்கும். இதன் கண்மணிகள் உருண்டையாக நன்கு புலப்படும்வகையில் இருக்கும். இதன் உடலில் கருப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் பட்டைகள் இருக்கும். தலை மேலே உள்ள பட்டைகள் அம்புக் குறி போன்று தெளிவாகக் காணப்படும். உடலின் அடிப்பகுதி வெளுத்துக் காணப்படும். பல்லி போன்ற இதன் இரைகளைப் பிடிக்க ஏதுவாக இதற்கு வளைந்த கூரியபற்கள் இருக்கும்.

OligodonArnensisSmith.jpg

இப்பாம்பின் மொத்த நீளம் 24 அங்குலமும், வால் 3.5 அல்குலமும் இருக்கும். (பெண் பாம்பு 640 மிமீ, வால் 100 மிமீ)

இப்பாம்புகள் இந்தியா, நேபாள இமயமலைப் பகுதிகளில் 4100 அடி உயரம்வரை உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

KukriHead.jpg

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaw, G. 1802 General Zoology, or Systematic Natural History. Vol.3, part 1 + 2. G. Kearsley, Thomas Davison, London: 313-615
  2. Oligodon arnensis at the Reptarium.cz Reptile Database. Accessed 11 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெய்ப்_பனையன்&oldid=2191825" இருந்து மீள்விக்கப்பட்டது