எண்ணெயால் வாய் கொப்பளித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்ணெய் கொப்பளித்தல் என்பது மாற்று மருத்துவ முறையாகும். இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தின் ஓர் புத்தகமான சக்கர சம்கிதாவில் இது பற்றிய குறிப்பு உள்ளது. அதில் இம்முறை கவல கிரஹா எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வாயின் உள் பகுதியில் உள்ள கிருமிகள் சுத்தப்படுத்தப்படுகிறது. [1]

செய்முறை[தொகு]

காலை வெறும் வயிற்றில் தோராயமாக ஒரு தேக்கரண்டி அளவுள்ள எண்ணெயை (நல்லெண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்) வாயில் ஊற்றி 15-20 நிமிடங்களுக்கு கொப்பளிக்க வேண்டும், பின் அதனை துப்பிவிட வேண்டும் [2]. கொப்பளிக்கும் போது எண்ணெய் எச்சிலுடன் இணைந்து பாகு நிலை குறைந்த வெள்ளை அல்லது மஞ்சள் நிற நீர்மமாக மாறிவிடும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "வாய் நலத்தில் எண்ணெய் கொப்பளித்தல்". 2010-02-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-24 அன்று பார்க்கப்பட்டது.
  2. "எண்ணெய் கொப்பளித்தல் முறையால் ஏற்படும் வணிக பலன்". 2011-10-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-24 அன்று பார்க்கப்பட்டது.