எண்ணுப்பெயர்கள் (விகாரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நான்கு (நால், நாலு)[தொகு]

எ.கா : 0க

நாலுவேதம் ஆம்

      நவை இல் ஆர்கலி

வேலி அன்னவன்,

      மலையின்மேல் உளான்,

சூலிதன் அருள்

      துறையின் முற்றினான்,

வாலி என்று உளான்,

      வரம்பு இல் ஆற்றலான்.’

- கம்பர் (கம்பராமாயணம்)

எ.கா: 0உ

'நால் வேதன் காண்'

(தேவாரம்-6-8-3)

மேற்கண்ட பாடலில் இடம்பெற்றுள்ள நாலு என்பது நான்கு என்னும் எண்ணுப்பெயரின் விகாரமாகும்.

இவை மட்டுமின்றி நாலுமுகத்தான் (பிரம்மன்), நாலுதிசை, நாலு புரவி, நாலு வாசல், நாலு கலை, நாலு நாள், நாலு தெரு, நாலு பேரை, நாலு வகுப்பு எனத் திருமூலர், இளங்கோ, கம்பர், ஒளவை, பட்டினத்தார், பாரதியார், பாரதிதாசன் முதலியோர் பாடல்களில் நாலு என்னும் சொல்லே எடுத்தாளப்பட்டுள்ளதைக் காணலாம்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல், நான்கு என்பதன் அடிப்படையே நாலு எனக் குறித்துள்ளார்.

ஆதாரம்[தொகு]

  1. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்ட ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப்பாடநூல் (பக்க எண்: 71)
  2. தமிழ்நாடு இணையக் கல்விக் கழகம் பார்த்த நாள் 11.05.2017