எண்ணிம தோற்றுரு
எண்ணிம தோற்றுரு அல்லது எண்ணிமப் படம் என்பது ஒரு இரு பரிமாண படத்தை ஒன்று அல்லது சுழியத்தால் (இரட்டை எண் முறையால்) சார்பீடு செய்வது ஆகும். பரவு (raster) மற்றும் திசையன் (vector) ஆகியவை இரு முக்கிய வகை தோற்றுருக்கள் ஆகும். பொதுவாக பரவலான பயன்பாட்டில் இருப்பது ராஸ்டர் படங்களே ஆகும்.[1]
கணித அடிப்படை
[தொகு]அடிப்படையில் ஒரு தோற்றுரு இரு அல்லது பல் பரிமாண கணித அணி ஆகும். அணியின் ஒவ்வொரு புள்ளியும் தோற்றுருவின் படிமத்தை பிரதிபலுக்கும் வண்ணம் ஒரு மதிப்பீட்டைக் கொண்டிருக்கும்.
பரவு (Raster)
[தொகு]பரவு படங்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிம மதிப்புகளைக் கொண்டுள்ளன, அவை பட கூறுகள் அல்லது படப்புள்ளிகள் என அழைக்கப்படுகின்றன. எண்ணிம படத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிசைகள் மற்றும் படப்புள்ளிகளின் நெடுவரிசைகள் உள்ளன. படப்புள்ளிகள் என்பது ஒரு படத்தில் மிகச்சிறிய தனிப்பட்ட உறுப்பு ஆகும்.
திசையன் (Vector)
[தொகு]திசையன் வரைகலை கணித வடிவவியலால் (திசையன்) விளைந்தன. கணித அடிப்படையில், ஒரு திசையன் ஒரு அளவு அல்லது நீளம் மற்றும் ஒரு திசை இரண்டையும் கொண்டுள்ளது. பெரும்பாலும், பரவு மற்றும் திசையன் கூறுகள் இரண்டும் ஒரு படத்தில் இணைக்கப்படும்; எடுத்துக்காட்டாக, உரை (திசையன்) மற்றும் புகைப்படங்கள் (பரவு) கொண்ட விளம்பர பலகையில் உண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gonzalez, Rafael (2018). Digital image processing. New York, NY: Pearson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-335672-4. இணையக் கணினி நூலக மைய எண் 966609831.