எண்ணப்பறவை சிறகடித்து (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எண்ணப்பறவை சிறகடித்து...
நூல் பெயர்:எண்ணப்பறவை சிறகடித்து...
ஆசிரியர்(கள்):வெ.இன்சுவை
வகை:பொது
துறை:கட்டுரைகள்
இடம்:கவிதா பப்ளிகேஷன்,
தபால் பெட்டி எண்: 6123,
8. மாசிலாமணி தெரு,
பாண்டி பஜார்,
தி.நகர்,
சென்னை -600 017.
மொழி:தமிழ்
பக்கங்கள்:256
பதிப்பகர்:கவிதா பப்ளிகேஷன்
பதிப்பு:செப்டம்பர்2004
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

பல தலைப்புகளிலான கட்டுரைகள் கொண்ட இந்நூல் 256 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 75 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

சேலம் மாவட்டத்தில் பிறந்த வெ. இன்சுவை ஆங்கிலம் , சமூகவியல், இதழியல் துறைகளில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப்பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். சென்னையிலுள்ள தொழில்நுட்பப் பயிலகம் ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் அ.ஜோதிலிங்கம் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரி வெ.பைங்கிளி சேலம் , ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர்கள் வெ.திருப்புகழ், இந்திய ஆட்சிப் பணி முடித்து குஜராத் மாநிலத்திலும், வெ.இறையன்பு , இந்திய ஆட்சிப் பணி முடித்து தமிழ்நாட்டிலும் பணியாற்றி வருகின்றனர். மற்றொரு சகோதரர் வெ.அருட்புனல் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தினமணி நாளிதழ் மற்றும் வேறு சில தமிழ் பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

பதிப்புரை[தொகு]

சமுதாய விழிப்புணர்வுடன் பல கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருப்பதாக பதிப்பாளர் சேது. சொக்கலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

பொருளடக்கம்[தொகு]

 1. அருட்புனல்
 2. கருவிலிருந்து கல்வி
 3. மாண்புமிகு மாணவர்கள்
 4. மனம் விட்டுப் பேசலாமா?
 5. ஒத்துழையுங்கள் ஒதுக்கப்பட மாட்டீர்கள்
 6. தவறு யாரிடம்?
 7. சுகமான சுற்றுலா போகலாம் வாங்க!
 8. குடும்ப வேலையிலும் இனி கூட்டணிதான்
 9. ஊடகங்கள் வளர்ச்சி ஒரு பண்பாட்டு சிதைவு
 10. நமக்குள் மறைந்திருக்கும் அன்பு, அமைதி, ஆனந்தம்
 11. இது நிஜமா?வெறும் கனவா?
 12. எத்தனை எத்தனை சுமைகள்
 13. வாய்த்தது வாய்த்ததுதான்
 14. தொப்பி வாங்கலியோ தொப்பி...
 15. "தாரண" ஆண்டை வரவேற்கத் தயாராவோம்!
 16. "பெண்மை" வாழ்க!
 17. பெண் மனசு
 18. "நட்புகள் பலவிதம்"
 19. மீசை வைத்த ஆண்கள்
 20. மறைந்திருந்து சமைக்கும் மர்மமென்ன?
 21. கணவனிடம் மனைவி என்ன எதிர்பார்க்கிறாள்?
 22. உங்கள் காதலியிடம் எப்படி பக்குவமாகச் சொல்வது?
 23. சிலேட்டு உடைந்தால் பயம்!
 24. உலகம் உங்கள் கையில் இளைஞர்களே!
 25. தொல்லைக்காட்சியான தொலைக்காட்சி
 26. உறவைத் தேடி...
 27. பெண்ணின் பெருந்தக்க யாவுள?
 28. பழக்கத்தை மாற்றலாமே!
 29. வெளியில் சொல்ல வெட்கமா?
 30. அம்மா...பூம்மா
 31. "நமக்கே நமக்கென ஒரு வீடு!"
 32. வீட்டு வேலை செய்யும் பெண்கள்
 33. ஜமாய்க்கும் ஐவர் கூட்டணி
 34. இந்தப் பெண்களின் எதிர்காலம்?
 35. குழந்தைகளின் மனத்தைப் பாழடிக்கும் காமிக்ஸ்
 36. பொது இடங்களில் நாம் எப்படி?
 37. ஒரு ரவிக்கைக்காக
 38. பரவசப்படுத்தும் மலைவாழ் குடும்பங்கள்
 39. நம் கண்களின் கனவுகள்
 40. என்றென்றும் நன்றியுடன்
 41. இவர் கடன் பணி செய்து கிடப்பதே
 42. வீட்டுக்காரரா? வீட்டின் சொந்தக்காரரா?
 43. ஊரெங்கும் பொங்கட்டும் பொங்கலோ பொங்கல் !
 44. சில இங்கிதங்கள்- சில தர்மசங்கடங்கள்

என்கிற 44 தலைப்புகளில் சமுதாய நோக்கத்துடன் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. பல கட்டுரைகள் பெண்களுக்கு சாதகமாக, பெண்களின் வேண்டுகோளாக இருக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]