எண்கிழமை
Appearance
எண்கிழமை என்பது கிறித்தவத்தில் ஒரு விழாவுக்குப்பின் வரும் எட்டாம் நாளையோ அல்லது சில பெருவிழாக்களுக்குப்பின் வரும் எட்டு நாட்களையும் கூட்டாகவோ குறிக்க பயன்படுத்தப்படும் பதமாகும்.[1]
கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறையில்
[தொகு]திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 23 மார்ச் 1955இல் வெளியிட்ட ஆணையின் படி கிறித்துமசு, உயிர்ப்பு ஞாயிறு மற்றும் பெந்தக்கோஸ்து ஆகிய விழாக்களுக்கு மட்டுமே எண்கிழமை கொண்டாடுவது நடைமுறையாக்கப்பட்டது. மேலும் 1969 நிகழ்ந்த மாற்றத்தில் பெந்தக்கோஸ்து விழா இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.[2]
உயிர்ப்பு விழாவின் எண்கிழமை ஆண்டவரின் பெருவிழாக்கள் (Solemnities of the Lord) என கொண்டாடப்படுகின்றன.[3] 30 ஏப்ரல் 2000, முதல் இவ்வெண்கிழமையின் இறுதிநாள் இறை இரக்கத்தின் ஞியாயிறாக கொண்டாடப்படுகின்றது.
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை பின்வருமாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது:
- கிறித்துமசு ஞாயிற்று கிழமையில் வருமாயின் திருக்குடும்ப விழா 30 டிசம்பரிலும் மற்ற ஆண்டுகளில் கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் வரும் ஞாயிறிலும் கொண்டாடப்படும்.
- 26 டிசம்பர்: புனிதர் ஸ்தேவான் விழா
- 27 டிசம்பர்: திருத்தூதர் யோவான் விழா
- 28 டிசம்பர்: மாசில்லா குழந்தைகள் விழா
- 29-31 டிசம்பர்: கிறிஸ்து பிறப்பின் எண்கிழமைகள்
- 1 ஜனவரி, இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா - விழா[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Oxford Dictionary of the Christian Church (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280290-3), article Octave
- ↑ Calendarium Romanum (Libreria Editrice Vaticana 1969)
- ↑ General Norms for Liturgical Year and Calendar, 24
- ↑ General Norms for Liturgical Year and Calendar, 35