எண்கண் முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மபுரீசுவரர் கோயில் வளாகத்தில் முருகன் கோயில்
முருகன் கோயில் நுழைவாயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:எண்கண்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டமைப்பு

எண்கண் முருகன் கோயில் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எண்கண் கிராமத்தில் உள்ள எண்கண் பிரம்மபுரீசுவரர் கோயிலில் ஒரு தனி சன்னதியாக உள்ள கோயிலாகும்.

முருகன் சன்னதி[தொகு]

முருகன் சன்னதிக்கு தெற்கு நோக்கிய வாயிலின் வழியே செல்லலாம். [1]

புராண வரலாறு[தொகு]

பிரபலமான செவிவழிக் கதைகளின்படி, இந்த கோவிலில் முருகன் சிலையை செதுக்கிய சிற்பி, சிக்கல் மற்றும் எட்டுகுடி ஆகிய இடங்களில் சிற்பத்தை செதுக்கிய அதே நபர் எனப்படுகிறது. சிக்கலில் சிலை சிற்பம் செய்தபின், அச்சிற்பி தனது வலது கட்டைவிரலை வெட்டிகொண்டார், அதனால் அவர் சிக்கலில் உள்ள உருவத்தின் அழகை மிஞ்சும் எதையும் எங்கும் உருவாக்க மாட்டார் என்பதை உறுதிசெய்தார். எட்டுகுடி சிலை வடிவத்தை சிற்பிய பிறகு, அவர், அதன் அழகு சிக்கலில் உள்ள சிற்பத்தை மிஞ்சியதாக உணர்ந்து, தன்னை தண்டித்துக்கொள்ள தன் கண்களை குருடாக்கிக்கொண்டார். ஆகவே அவர், எங்கணில் முருகனின் சிலையை சிற்பம் போது, ஒரு பெண்ணின் உதவியை நாடினார். அப்போது தவறி அவர், அந்தப் பெண்ணின் ஒரு விரலை வெட்டி, இரத்தம் வெளியேற தொடங்கியது. இந்த இரத்தத் துளிகள் அவரது கண்களில் விழுந்து அவரது கண்களை குணப்படுத்தியது. சிற்பி பார்க்கமுடிவதை உணர்ந்தவுடன், ஆச்சரியத்துடன் "எங்கண்!" தமிழ் மொழியில் "என் கண்கள்" என்று பொருள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Tourism in Tiruvarur district". District Administration, Tiruvarur. Archived from the original on 2006-01-13. பார்க்கப்பட்ட நாள் 2011-04-11.
  • Tourist Guide to Tamil Nadu. Sura Books. பக். 76. ISBN 81-7478-177-3, ISBN 978-81-7478-177-2. 

புகைப்படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்கண்_முருகன்_கோயில்&oldid=3448627" இலிருந்து மீள்விக்கப்பட்டது