எட்வின் ரோசு வில்லியம்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்வின் ரோசு வில்லியம்சு (Edwin Ross Williams) அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் ஆவார். இவர் 1942 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வில்லியம்சு பணிபுரிந்தார். 1964 ஆம் ஆண்டு நெப்ராசுகா வெசுலியன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டமும் , 1966 ஆம் ஆன்டு கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை மற்றும் 1970 ஆண்டு வெசுலியன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

1994 ஆம் ஆண்டில் அமெரிக்கன் இயற்பியல் கழகத்தில் வில்லியம்சுக்கு உறுப்பினர் தகுதி கிடைத்தது. [2] [3] அளவீட்டு ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்காக கருவி மற்றும் அளவீட்டு அறிவியலுக்கான குழுவினர் இதற்கான பரிந்துரையைச் செய்தனர். இவரது ஆராய்ச்சியானது ஒளியன் துகள் ஆய்வுகளை ஓர் உயர் வரம்புக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும். புரோட்டான் அணுவின் காந்தத் திருப்புத் திறனுகும் அதன் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதத்தை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலும். நேர்த்தியான கட்டமைப்பு மாறிலி, மற்றும் அடிப்படை மின் அலகுகள், ஆம்பியர், வோல்ட், ஓம் மற்றும் ஃபராட் ஆகியவற்றின் மிகவும் துல்லியமான உணர்தல்களுக்கும் வழிவகுக்கும். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Steiner, Richard L.; Newell, David B.; Williams, Edwin R. (April 1999). "A Result from the NIST Watt Balance and an Analysis of Uncertainties". IEEE Transactions on Instrumentation and Measurement 48 (2): 205–208. doi:10.1109/19.769564. http://ws680.nist.gov/publication/get_pdf.cfm?pub_id=11025. பார்த்த நாள்: 10 May 2017. 
  2. "APS Fellow Archive". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  3. "APS Fellowship". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  4. "APS Fellows 1994". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.