எட்வர்ட் லீ தார்ண்டைக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வர்ட் லீ தார்ண்டைக்
Edward L. Thorndike
பிறப்பு(1874-08-31)ஆகத்து 31, 1874
வில்லியம்சுபர்க், மாசச்சூசெட்ஸ், ஐ.அ
இறப்புஆகத்து 9, 1949(1949-08-09) (அகவை 74)
மொண்ட்ரோசு, நியூ யோர்க் மாநிலம்
தேசியம்அமெரிக்கர்
கல்விரொக்சுபுரி இலத்தீன் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்உவெசுலியன் பல்கலைக்கழகம்
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிஉளவியலாளர்
பணியகம்ஆசிரியர் கல்லூரி, கொலம்பியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநவீன கல்வியல் உளவியலின் தந்தை
பட்டம்பேராசிரியர்
வாழ்க்கைத்
துணை
எலிசபெத் மோல்ட்டன்

எட்வர்ட் லீ தார்ண்டைக் (Edward Lee Thorndike, ஆகத்து 31, 1874 – ஆகத்து 9, 1949)  என்பவர் ஓர் அமெரிக்க உளவியலாளர் ஆவார். பொது உளவியலின் ஆய்வு என்ற அமெரிக்க பத்திரிக்கையின் 2002 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இருபதாம் நுற்றாண்டில் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட உளவியலாளர்களில் ஒன்பதாவது இடத்தில்  தார்ண்டைக் உள்ளதாக முடிவுகள் அறிவிக்கப்பட்டது.[1] தன் வாழ்க்கையின் பெரும்பகுதி பணி காலத்தை  கொலம்பியா பல்கலை கழகத்தின் ஆசிரியர் கல்லூரியிலே கழித்தார்.

இவரின் ஒப்பிட்டு உளவியல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் ஆகிய பிரிவுகளில் செய்த ஆராய்ச்சி, இணைப்பு கோட்பாடு என்ற தத்துவத்தை உருவாக்கி நவீன அறிவியல் பூர்வமான கல்வி உளவியல் உருவாக அடித்தளமிட்டது. மேலும் இவர் அமெரிக்க உளவியல் கழகத்தின் உறுப்பினராகவும் மற்றும் அதன் தலைவராகவும் பணியாற்றினார். வலுவூட்டல் கோட்பாடு மற்றும் நடத்தை பகுப்பாய்வு ஆகியவற்றின் மீது தனக்கு இருந்து தாக்கத்தினால் நடத்தை உளவியலில் உள்ள அனுபவ விதி பிரிவிற்கு தன்னுடைய விளைவு விதி மூலம் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கினார். தார்ண்டைக்கின் பங்களிப்பின் மூலம் நடத்தை உளவியல் துறையானது கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மற்றும் இவரின் விளைவு விதி வகுப்பறை சுழலில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Haggbloom, Steven J.; et al., Renee; Warnick, Jason E.; Jones, Vinessa K.; Yarbrough, Gary L.; Russell, Tenea M.; Borecky, Chris M.; McGahhey, Reagan et al. (2002). "The 100 most eminent psychologists of the 20th century". Review of General Psychology 6 (2): 139–152. doi:10.1037/1089-2680.6.2.139. http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்ட்_லீ_தார்ண்டைக்&oldid=2896262" இலிருந்து மீள்விக்கப்பட்டது