உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வர்ட் புல்வர் லிட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிட்டன் பிரபு
ஹென்றி வில்லியம் பிக்கர்ஸ்கில் வரைந்த உருவப்படம், 1831.
காலனிகளுக்கான அரசு செயலாளர்
பதவியில்
5 சூன் 1858 – 11 சூன் 1859
ஆட்சியாளர்விக்டோரியா
பிரதமர்டெர்பி ஏர்ல்
முன்னையவர்ஸ்டான்லி பிரபு
பின்னவர்நியூகேஸில் டியூக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
எட்வர்ட் ஜார்ஜ் ஏர்ல் லிட்டன் புல்வர்[1]

(1803-05-25)25 மே 1803
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு18 சனவரி 1873(1873-01-18) (அகவை 69)
டோர்கே, இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிவிக் (1831–1841)
கன்சர்வேட்டிவ் (1851–1866)
துணைவர்
ரோசினா டாய்ல் வீலர் (தி. 1827)
பிள்ளைகள்ராபர்ட் உள்ளிட்ட இருவர்
பெற்றோர்வில்லியம் ஏர்ல் புல்வர்
எலிசபெத் பார்பரா வார்பர்டன்-லிட்டன்
முன்னாள் மாணவர்திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
டிரினிட்டி ஹால், கேம்பிரிட்ஜ்
எழுத்துப் பணி
வகைகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Pelham

எட்வர்ட் ஜார்ஜ் ஏர்ல் லிட்டன் புல்வர்-லிட்டன், முதலாம் பரோன் லிட்டன் (Edward George Earle Lytton Bulwer-Lytton, 1st Baron Lytton, மே 1803 - 18 சனவரி 1873) என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆங்கில எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 1831 முதல் 1841 வரை விக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1851 முதல் 1866 வரை கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1858 சூன் முதல் 1859 சூன் வரை காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளராக இருந்தார், பிரிட்டிஷ் கொலம்பியாவின் நிறுவனராக ரிச்சர்ட் கிளெமென்ட் மூடியைத் தேர்ந்தெடுத்தார்.

புல்வர்-லிட்டனின் படைப்புகள் அவரது காலத்திலேயே நன்கு அறியப்பட்டவையான இருந்தன. " பேனா முனை வாளின் முனையை விட கூர்மையானது " போன்ற பிரபலமான பல சொற்றொடர்களுக்குச் சொந்தக்காரர்.

வாழ்கைக் குறிப்பு

[தொகு]

இவர் ஜெனரல் புல்வர், எலிசபெத் லிட்டன் இணையருக்கு மகனாக இலண்டன் நகரத்தில் பிறந்தார். இவருடைய இரண்டாவது வயதில் தந்தை ஜெனரல் புல்லரை இழந்தார். எனவே இவரது தாயாரே இவரை வளர்த்தார். இயற்கையாகவே கல்வியில் விருப்பம் உள்ளவராக இருந்த இவர், தமது ஏழாவது வயதில் கவிதைகளை இயற்றத் துவங்கினார். 1823 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். 1826 இல் பல்கலைக் கழகத்தை விட்ட பிறகு புதினங்களையும் நாடக நூல்களையும் செய்யுள்களையும் இயற்றினார். அரசியலிலும் ஈடுபட்டார். 1831-ஆம் ஆண்டு முதல் 1842-ஆம் ஆண்டு வரையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1858-இல் அரசாங்கத்தின் காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளராக இருந்து பணியாற்றினார். 1866-இல் “லார்டு” என்னும் பிரபுப்பட்டம் பெற்றார்.

லிட்டன், புதினம் முதலிய 28 உரைநடை நூல்களை எழுதினார். 10 செய்யுள் நூல்களை இயற்றினார். 6 நாடக நூல்களை எழுதினார். இவர் எழுதிய நூல்களில் உலகப் புகழ்பெற்று விளங்குவது. “பாம்பி நகரத்தின் இறுதி நாட்கள்” (The Last days of Pompeii) என்னும் புதினமாகும். இவர் 1833-ஆம் ஆண்டு இத்தாலிக்குச் சென்று அங்கு நேபில்ஸ் நகரத்தில் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது எரிமலையால் அழிந்து ஆய்வாளர்களால் தோண்டி எடுக்கபட்ட பொம்பெயி நகரத்தைக் கண்ட லிட்டன் பிரபு, இதன் அழிவைச் வரலாற்றுக் கதையாக அமைத்து 1834-இல் “பாம்பி நகரத்தின் இறுதி நாட்கள்” என்னும் புதினத்தை எழுதினார்.

இவர் 1866 இல் என்ற The Lost Tales of Miletus செய்யுள்நூலை இயற்றினார். இதற்கு The Secret way என்று வேறு பெயரும் உண்டு. மேல் நாட்டில் வாய்மொழியாக வழங்கிவந்த கதையை லிட்டன் பிரபு செய்யுள் நடையில் வழிநூலாக அமைத்தார். இந்தக் கதையைத் தழுவிப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழில் மனோன்மணீயம் என்னும் இந்த நாடக நூலை எழுதினார்.[2]

படைப்புகள்

[தொகு]

புதினங்கள்

[தொகு]

வசனங்கள்

[தொகு]
  • Ismael (1820)[3]
  • The Poems and Ballads of Schiller, translator (1844), published by Bernard Tauchnitz, Leipzig
  • The New Timon (1846), டென்னிசன் மீதான தாக்குதலாக பெயர் இல்லாமல் வெளியிடப்பட்டது.[3]
  • King Arthur (1848–1849)[3]

நாடகங்கள்

[தொகு]
  • The Duchess de la Vallière (1837)
  • The Lady of Lyons (1838)[4]
  • Richelieu (1839), இதைத் தழுவி 1935 ஆம் ஆண்டு Cardinal Richelieu என்ற திரைப்பட் எடுக்கபட்டது.
  • Money (1840)
  • Not So Bad as We Seem, or, Many Sides to a Character: A Comedy in Five Acts (1851)
  • The Rightful Heir (1868), based on The Sea Captain, an earlier play of Lytton's
  • Walpole, or Every Man Has His Price
  • Darnley (முடிவுறாத படைப்பு)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brown, Andrew (23 September 2004). "Lytton, Edward George Earle Lytton Bulwer [formerly Edward George Earle Lytton Bulwer], first Baron Lytton". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/17314.  (Subscription or UK public library membership required.)
  2. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 20- பக்கம்: 25 பதிப்பு:2014, இளங்கணி பதிப்பகம், சென்னை
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 Drabble, Margaret (2000). The Oxford Companion to English Literature (sixth ed.). Oxford; New York: Oxford University Press. p. 147. ISBN 0198662440.
  4. Lytton, Edward Bulwer Lytton (1 January 2001). The Lady of Lyons; Or, Love and Pride. Archived from the original on 6 October 2014. Retrieved 2 October 2014 – via Project Gutenberg.