எட்மிரால்ட்டி (ஹொங்கொங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எட்மிரால்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எட்மிரால்டி, குவீன்சு வீதி

எட்மிரால்டி (Admiralty) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு, மையம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது மையம் நகரத்திற்கும், வஞ்சாய் நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. வடக்கே விக்டோரியா துறைமுகம் அமைந்துள்ளது.

ஹொங்கொங்கை பிரித்தானியர் கைப்பற்றியதன் பின்னர், அவர்கள் தமது கடற்படை தலமையகத்தை இந்த இடத்திலேயே நிறுவியிருந்தனர். அதன் காரணமாகவே "எட்மிரால்டி" எனும் பெயர் நிலைபெற்றமைக்கான காரணமாகும்.