எட்டு ஒழுக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எட்டு ஒழுக்கங்கள் (8 Discipline/8D) என்பது போர்ட் தானுந்து நிறுவனத்தால் உருவக்கப்பட்ட சிக்கல் தீர்வு வழிமுறை ஆகும். பொதுவாக பொறியாளர்கள் மற்றும் பிற தொழில் நிபுணர்களால் பயன்படுத்தபடுகின்றது.

வரலாறு[தொகு]

இது சிக்கலுக்கான மூலக்காரணத்தை அறிய மற்றும் அதற்கான நிரந்தர தீர்வுகளை தேர்ந்தெடுக்க ஃபோர்டு மோட்டர் கம்பனியால் மேம்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தபட்டு வரும் முறைப்படியான செயல்முறை. அமெரிக்க ராணுவமும் இரண்டாம் உலகப்போரின் போது இம்மாதிரியான செயல்முறையினை மேம்படித்தி அதற்ககு அமெரிக்க ராணுவ ” வழக்கம் 1520 நியமத்திர்க்கு ஒவ்வாத பொருளுக்கான தீர்வு மற்றும் இட மாற்ற ஒழுங்கமைப்பு” என்று பெயரிட்டுள்ளது. ஆயினும் இதனுடைய மூலம் இன்னும் அறியப்படாமல் உள்ளது,

உபயோகம்[தொகு]

 1. மூலக்காரணம் தெரியாத சிக்கல்கள்.
 2. சிக்கல்களின் மீள்நிகழ்வு.
 3. தனி மனித திறனால் கண்டறியபடமுடியாத மூலக்காரணம்.
 4. வாடிக்கையாளர்களின் புகார்கள்.
 5. நெருக்கடி நிலைக்கான பதில் செயல்:(Emergency Response Action)

சிக்கலின் தீவிரம் மற்றும் அதனால் ஏற்ப்படும் பாதிப்பையும் பொருத்து நெருக்கடி நிலையென்று அறிவித்து நெருக்கடி நிலைக்கான பதில் செயலை கண்டறிந்து அதனை செயல்படுத்தவேண்டும். இதற்கு “நெருக்கடி நிலைக்கான பதில் செயல்” என்று பெயர்.

ஒழுக்கங்கள்[தொகு]

 • ஒ1 (D1) - அணியினை நிறுவுதல் (Establish a team):
சிக்கல் ஏற்பட்ட துறை, சிக்கலின் தீவிரம், சிக்கலை நீக்க தேவைப்படும் அறிவு மற்றும் சிக்கலை நீக்க தேவைப்படும் ஆற்றல் இதனை பொருத்து நெறிஞர்கள் அடங்கிய ஓர் அணியினை நிறுவி அந்த அணிக்கான தலைவரையும் நிர்ணயிக்கவேண்டும்.
 • ஒ2(D2) - சிக்கலை விவரித்தல் (Describe the problem):
சிக்கலை தெளிவாகவும் துல்லியமாகவும் விவரிக்க வேண்டும். விவரங்கள் எது தவறாக உள்ளது, எவ்வளவு தவறாக உள்ளது என்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சிக்கலை விவரிக்க பின்வரும் பகுப்பாய்வு உதவும்.
 • இருப்பு / இல்லாதது பகுப்பாய்வு (Is / Is not analysis)
 • ஒ3 (D3) - தற்காலிக உள்ளடக்கும் செயல் (Develop interim containment action (ICA)):
தற்காலிக உள்ளடக்கும் செயலை உடனடியாக செயல் படுத்தி, இந்த செயல், விளைவுக்கான தற்காலிக தீர்வுக்கான செயல் முறையே என்று உறுதிப்படுத்தவேண்டும். தற்காலிக உள்ளடக்கும் செயலின் வினைவுறுத்திறனை தகுதியாக்கவேண்டும்.
 • ஒ4 (D4) - மூலக்காரணம் அறிதல், உறிதிபடுத்துதல் மற்றும் மூலக்காரணம் தற்போதய கட்டுப்பாட்டு நிலையிலிருந்து தப்பிக்கும் காரணதேர்ந்தெடுப்பு (Define and Verify Root cause and Escape point):
மூலக்காரணத்தை பின் வரும் செயல் முறைகளை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கலாம்.
 1. காரண-காரிய வரைபடம் (Cause and effect diagram).
 2. ஐந்து “ஏன்” பகுப்பாய்வு (5 Why analysis).
 • ஒ5 (D5) - மூலக்காரணத்திற்கான நிரந்தர தீர்வின் செயல்முறை தேர்ந்தெடுத்தல் மற்றும் சிக்கல் கட்டுபாட்டிலிருந்து தப்பிக்காமல் இருக்க புதிய சரியான கட்டுபட்டை தேர்ந்தெடுத்தல் (Choose and Verify Permanent corrective action (PCA)):
ஒவ்வொரு சிக்கலுக்கும் பல காரணங்கள் இருக்கும். அவற்றிலிருந்து மிகச்சிறந்த மற்றும் மிகச்சரியான மூலக்காரணத்தை தேர்வு செய்யவேண்டும்.
 • ஒ6 (D6): நிரந்தர தீர்வுக்கான செயல் முறையை செயல் படுத்தல் மற்றும் அச்செயல் முறை நிரந்தர தீர்வை அளிக்குமா என்று உறிதிப்படுத்துதல் ( Implementation and Validation of Permanent corrective action):
தற்காலிக தீர்வுக்கான செயல் முறையை நீக்கி நிரந்தர தீர்வுக்கான செயல் முறையை செயல் படுத்தி இச்செயல் முறை நிரந்தர தீர்வை அளிக்கிறதா என்று உறுதிப்படுத்தவேண்டும்.
 • ஒ7 (D7): மீள் நிகழ்வு தடுத்தல் (Prevent reoccurrence):
நிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறுதி செய்யப்பட்ட பிறகு மீள் நிகழ்வு நிகழாமல் இருக்க, கொள்கையில், முறை அமைப்பில் மற்றும் நடைமுறையில் சிறுமாற்றம் செய்யவேண்டும்.
 • ஒ8 ( D8 ): அணி பாராட்டு மற்றும் அங்கீகரிப்பு (Team recognition ):
நிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறிதி செய்யப்பட்ட பிறகு மற்றும் சிக்கல் முழுமையாக தீர்ந்த பிறகு, நிரந்தர தீர்வை கண்டறிந்த அணியையும், அணியில் உள்ளவர்களின் பங்களிப்பையும் பாராட்டவேண்டும். அணியை அங்கீகரிக்கவேண்டும்.

ஆவணமாக்குதல்[தொகு]

நிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறிதி செய்யப்பட்ட பிறகு மற்றும் சிக்கல் முழுமையாக தீர்ந்த பிறகு, இதனை முறைப்படி ஆவணமாக்குதல் வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வேரு ஓர் இட்த்தில் இது போன்ற சிக்கல்கள் நிகழுமேயானால் எளிதாக தீர்க்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டு_ஒழுக்கங்கள்&oldid=2292729" இருந்து மீள்விக்கப்பட்டது