எட்டாவது பிரிக்சு மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டாவது பிரிக்சு மாநாடு
இடம்பெற்ற நாடுஇந்தியா
தேதி15–16 அக்டோபர் 2016
இடம்தாஜ் எக்சோட்டிக்கா[1]
நகரம்பெனோலிம், கோவா (மாநிலம்)
பங்குகொள்வோர்பிரிக்ஸ் உறுப்பினர்கள்
விருந்தாளி அழைப்புகள்:
வங்காள விரிகுடா தொழினுட்ப, பொருளாதார கூட்டுறவு முனைப்பு நாடுகள்
முன்னையதுஏழாம் பிரிக்சு மாநாடு
பின்னையது9வது பிரிக்சு மாநாடு
இணையதளம்BRICS India 2016

2016 பிரிக்சு மாநாடு (2016 BRICS summit) ஆண்டுதோறும் பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், உருசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர்கள் சந்திக்கும் மாநாடுகளில் எட்டாவது ஆகும். இந்த மாநாடு 2016ஆம் ஆண்டு அக்டோபர் 15, 16 நாட்களில் இந்தியாவின் கோவா மாநிலத்தில் பெனோலிம் பகுதியிலுள்ள தாஜ் எக்சோட்டிக்கா உண்டுறை விடுதியில் நடைபெற்றது.[2] பெப்ரவரி 2016 முதல் திசம்பர் 2016 வரை இந்தியா பிரிக்சு தலைமைப் பொறுப்பில் உள்ளது.[3][4][5]

பங்கேற்பு[தொகு]

மாநாடு துவங்கும் முன்னர் பிரிக்சு தலைவர்களின் குழும ஒளிப்படம்.
அடிப்படை பிரிக்சு உறுப்பினர்கள்
மாநாட்டை நடத்தும் நாடும் தலைவரும் தடித்த எழுத்தில்.
உறுப்பினர் நாடு சார்பாக பட்டம்
பிரேசில் பிரேசில் மிசெல் டெமெர் குடியரசுத் தலைவர்
உருசியா உருசியா விளாதிமிர் பூட்டின் குடியரசுத் தலைவர்
இந்தியா இந்தியா நரேந்திர மோதி பிரதமர்
சீனா சீனா சீ சின்பிங் குடியரசுத் தலைவர்
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா யாக்கோபு சூமா குடியரசுத் தலைவர்

பிரிக்சு-பிம்சுடெக் மாநாடு[தொகு]

பிரிக்சு மற்றும் பிம்சுடெக் இரண்டிலும் அங்கம் வகிக்கும் இந்தியா, பிம்சுடெக் எனப்படும் பல்துறை தொழினுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முனைப்பு (BIMSTEC) உறுப்பினர் நாடுகளை அழைத்திருந்தது.[6]

பிம்சுடெக் நாடுகளின் சார்பாக வருகை புரிந்தவர்கள்

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
2016 BRICS summit
என்பதின் ஊடகங்கள் உள்ளன.