எட்டாம் இராமவர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்டாம் இராம வர்மா (Rama Varma VIII) (இறப்பு: 1790 ஆகத்து 16) என்பவர் 1775 முதல் 1790இல் தான் இறக்கும் வரை கொச்சி இராச்சியத்தை ஆண்ட ஒரு இந்திய மன்னராவார். [1]

ஆட்சி[தொகு]

எட்டாம் இராம வர்மா இரண்டாம் கேரள வர்மாவின் இளைய சகோதரர் ஆவார். மேலும், 1775இல் அவரது மரணத்திற்குப் பின்னர் அரியணையில் ஏறினார். இவர் தனது ஆட்சியின் போது எந்தவொரு அதிகாரமுமில்லாமல் இருந்தார். ஏனெனில் இந்த இராச்சியம் பெரும்பாலும் மைசூர் அரசின் ஐதர் அலியின் கீழ் ஒரு கைப்பாவை மாநிலமாக இருந்தது. இராம வர்மாவின் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம் படைத்தளபதி சர்தார் கான் கொச்சி நகரைக் கைப்பற்றி திருச்சூரில் தனது இல்லத்தை நிறுவினார். [2]

இறப்பு[தொகு]

இவர், 1790 ஆகத்து 16 அன்று பெரியம்மை நோயினால் இறந்தார். இவருக்குப் பின் இவரது மருமகன் சக்தன் தம்புரான் அரியணைக்கு வந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of rulers of Kochin". worldstatesmen.org.
  2. History of Cochin. corporationofcochin. பக். 8 இம் மூலத்தில் இருந்து 29 December 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091229045823/http://www.corporationofcochin.net/Cochin.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டாம்_இராமவர்மா&oldid=3084251" இலிருந்து மீள்விக்கப்பட்டது