எட்டப் பார்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டப் பார்வை
Hypermetropia
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புvst, கண் மருத்துவம்
ஐ.சி.டி.-10H52.0
ஐ.சி.டி.-9367.0
மெரிசின்பிளசு001020

எட்டப் பார்வை (Hyperopia) என்றும் தூரப் பார்வை (longsightedness அல்லது hypermetropia) என்றும் அறியப்படும் கண்ணின் குறைபாடு விழிக்கோளமோ விழி வில்லையோ செம்மையாக இல்லாமையால் உருவாகிறது. இக்குறைபாட்டினால் அண்மையிலுள்ள பொருட்களைக் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றல் குறைகிறது. சில தீவிரமான குறைபாடுகளில் எந்த தொலைவிலுள்ள பொருளையுமே குவியப்படுத்த இயலாது போகலாம். ஓர் பொருள் கண்ணின் அருகே வரும்போது நலமான கண்ணின் வில்லையானது தனது வலுவை கூட்டிக்கொண்டு பொருளின் படிமத்தை விழித்திரையில் படியச் செய்யும். ஆனால் கருவிழி மற்றும் கண்வில்லையின் வலு குறைந்து இவ்வாறு ஏற்ற இயலாவிடில் எட்டப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதனால் பொருளின் படிமம் விழித்திரைக்குப் பின்னால் உள்ளதொரு புள்ளியில் குவியப்பட்டு தெளிவின்றித் தெரியும்.

எட்டப் பார்வையும், குழி வில்லை மூலம் சரி செய்தலும்.

இது முதிய அகவையில் தோன்றும் இதனைப் போன்றே அண்மைப் பொருட்களைக் காணும் தெளிவைக் குறைக்கும் மூப்புப்பார்வையிலிருந்து[1] வேறுபட்டது[1][2][3]

இக்குறைபாடு மரபுவழியாக மிகச்சிறிய கண் அல்லது தட்டையான கருவிழியிருப்போருக்கு ஏற்படுகிறது. இதனை குழி வில்லை கொண்ட மூக்குக் கண்ணாடிகள் மூலமோ தொடுவில்லைகள் மூலமோ சரியாக்கலாம்.

இதனையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 American Optometric Association. Optometric Clinical Practice Guideline: Care of the patient with presbyopia. பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் 1998.
  2. "Eye Health: Presbyopia and Your Eyes." WebMD.com. October, 2005. Accessed September 21, 2006.
  3. Chou B. "Refractive Error and Presbyopia." பரணிடப்பட்டது 2012-11-01 at the வந்தவழி இயந்திரம் Refractive Source.com Accessed September 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டப்_பார்வை&oldid=3593761" இலிருந்து மீள்விக்கப்பட்டது