உள்ளடக்கத்துக்குச் செல்

எட்ஜ் (மற்போர் வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்ஜ்
2013 இல் எட்ஜ்
பிறப்புஆடம் ஜோசப்கோப்லாண்ட்
அக்டோபர் 30, 1973 (1973-10-30) (அகவை 50)

ஆடம் ஜோசப் கோப்லாண்ட் (பிறப்பு: அக்டோபர் 30, 1973) [1] ஒரு கனேடிய நடிகர் மற்றும் முன்னாள் தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார், எட்ஜ் என்ற மேடைப் பெயரில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் ரா மற்றும் சுமாக்டவுன் நிகழ்ச்சிகளில் விளாஇயாடியடஹ்ன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவர் 2012 இன் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் ஹால் ஆஃப் ஃபேம் உறுப்பினராக உள்ளார்.

தொழில்முறை மல்யுத்த வீரர்களான ஸ்வீட் டாடி சிக்கி மற்றும் ரான் ஹட்ச்சன் ஆகியோரால் கோப்லாண்டிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1990 களில், இவர் அமெரிக்காவின் பல்வேறு சுயாதீன போட்டிகளில் மல்யுத்தம் செய்தார். இந்தக் காலகட்டங்களில் இவர் ஒற்றையர் போட்டிகளிலும் தனது நீண்டகால சிறந்த நண்பரான ஜேசன் ரெசோவுடன் இணைந்து இணை வாகையாளர் போட்டிகளிலும் பங்கேற்றார், . 1997 ஆம் ஆண்டில், கோப்லாண்ட் உலக மல்யுத்த சங்கம் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அடுத்த ஜூன் மாதம் எட்ஜ் என்ற மேடைப் பெயரில் தொலைக்காட்சியில் அறிமுகமானார். ஜூலை 1999 இல், டொராண்டோவில் நடந்த போட்டி ஒன்றில் கண்டங்களுக்கிடையேயான வாகையாளர் பட்டத்தினைப் பெற்றார். எட்ஜ் மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் இணைந்து உலக மல்யுத்த சங்கத்தின் இணை வாகையாளர் பட்டங்களை வென்றனர் .

அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக இவர் திகழ்கிறார். இவர் ஒட்டுமொத்தமாக 31 வாகையாளர் பட்டங்களை வென்றுள்ளார். மிகுகன வாகையாளர் பட்டத்தினை ஏழுமுறையும் , உலக வாகையாளர் பட்டத்தினை நான்கு முறையும், கண்டங்களுக்கு இடையிலான வாகையாளர் பட்டத்தினை ஐந்து முறையும், அமெரிக்க வாகையாளர் பட்டத்தினை ஒரு முரையும், இணை வாகையாளர் பட்டத்தினை 12 முறையும் (டபிள்யூ டபிள்யூ எஃப்) மற்றும் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் இணை வாகையாளர் பட்டத்தினை இரண்டு முறையும்,

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் 14 வது டிரிபிள் கிரவுன் வாகையாளர்மற்றும் 7 வது கிராண்ட்ஸ்லாம் வாகையாளர் ஆவார் . இவர் 2001 இல் கிங் ஆஃப் தி ரிங் போட்டியை வென்றார், 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரெஸில்மேனியாவில் மணி இன் தி பேங்க் போட்டியில் இவர் வென்றார். மேலும் 2010 இல் ராயல் ரம்பிள் போட்டியில் வென்றார். இதன்மூலம் இந்தச் சாதனையினைப் புரிந்த முதல் நபர் எனும் சாதனை படைத்தார்.[2] இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் ரெஸ்டில்மேனியா XXIV உட்பட பல முக்கியமன போட்டிகளில் கலந்துகொண்டு தலைப்புச் செய்தியாக வந்துள்ளார். இவரது மனைவி பெத் பீனிக்ஸ் 2017 ஆம் ஆண்டில் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்ந்தார்.[3]

தொழில்முறை மல்யுத்தத்தைத் தவிர, கோப்லாண்ட் கற்பனைத் திரைப்படமான ஹைலேண்டர்: எண்ட்கேம் மற்றும் டபிள்யுடபிள்யுஇ ஸ்டுடியோஸின் பெண்டிங் தி ரூல்ஸ் ஆகியவற்றில் தோன்றினார். பலவீனமான இணைப்பு, மைண்ட் ஆஃப் மென்சியா, டீல் அல்லது நோ டீல், எம்ஏடிவி மற்றும் தி ஃப்ளாஷ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தினராக தோன்றியுள்ளார். இவர் சிஃபை தொடரான ஹேவனில் டுவைட் ஹெண்ட்ரிக்சனாகவும், வைக்கிங்ஸின் ஐந்தாவது பருவத்தில் கெட்டில் பிளாட்னோஸ் என்ற கதாபாத்திரமாகவும் தோன்றினார் .

சான்றுகள்[தொகு]

  1. Copeland, Adam (November 2004). Adam Copeland on Edge. WWE Books. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7434-8347-2. I was born weighing 10 pounds 12 ounces at 7:05 A.M. on October 30, 1973, at the Orangeville Hospital.
  2. Murphy, Ryan (April 14, 2011). "WWE "Living on the Edge: The Career of Adam Copeland"". Wwe.com. பார்க்கப்பட்ட நாள் October 30, 2011.
  3. "Beth Phoenix Will Make History With Hall Of Fame Induction". Comicbook.com. February 27, 2017. பார்க்கப்பட்ட நாள் March 1, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்ஜ்_(மற்போர்_வீரர்)&oldid=2966374" இலிருந்து மீள்விக்கப்பட்டது